Sunday, January 3, 2016

கொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைஞாண் கொடி, மெட்டி, வளையல், காதணி அணிவதன் தார்ப்பரியம் என்னவென்று தெரியுமா?

சிவமயம் சிவாயநம 

கொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைஞாண் கொடி, மெட்டி, வளையல், காதணி அணிவதன் தார்ப்பரியம் 
என்னவென்று தெரியுமா? அதைப்பற்றிப் பார்ப்போம் 

சாத்வீக உணவே ( சைவ உணவு) உடலுக்கு  மருந்து  ஆகும்

நம் தமிழர் ( தமிழர்களுடைய பண்பு, கலாச்சாரம்)  பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை 
கொண்டிருப்பவை 

 அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக 
உருவானவை என்பதே உண்மை.நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய 
வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் 
பராமரிக்கிறது 

 எத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமாகன 
ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கீழைத்தேய 
நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும் 

இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே 
ஏற்றது. 

அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் 
உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை 
தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல 
பயன் தரும் 

தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) 
நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்தது நமது தமிழர் பாரம்பரியத்தில்

 அது 
நமது ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே ஆகும். 

கொலுசு அணிதல் 

ஆரம்ப காலத்தில் நாம் எல்லோரும் கொலுசு அணிந்தோம். பின்னர் இடைப்பட்ட 
காலத்தில் அது பழங்கால பழக்கம் என்று கைவிடப்பட்டது. தற்பொழுது அது 
மீண்டும் வழக்கத்திற்கு வந்ததுள்ளது. அதிலும் ஒற்றைக் காலில் கொலுசு 
அணிவதுதான் பேஷன். பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், 
காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி 
இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் 
வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை 
அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். 
சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். 
குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் 
குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் 
கொலுசு அணிவிக்கப்படுகிறது. உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் 
ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை 
தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் 
உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு 
பகுதியை ஸ்திரப் படுத்தவும் கொலுசு பயன்படுகிறது. 

மெட்டி அணிதல் 

மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏன் என்றால் 
பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. 
கொலுசைப் போலவே மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். ஏன் 
என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊ 
டுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல்உள்ளது. முக்கியமாக கருப்பை நோய்களை 
கட்டு படுத்துகிறது. கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி 
என்பவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி 
அவசியப்படுகிறது

 கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் 
அழுத்தப்படுவதால் எமது உடல் பிணிகளை ( நோய்களை)  முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது 
உடல் பிணிகளைக் ( நோய்களைக்)  குறைக்கிறது. 

அரைஞாண் கொடி அணிதல் 

சிறு குழந்தையாக நாம் இருக்கையில் நமக்கு இடுப்பில் அரை நாண் கொடி 
அணிவிப்பது வழக்கம். உடலின் நடுப்பகுதியான இடுப்பில் அணிவிப்பதன் முக்கிய 
நோக்கமே உடலில் குருதி சுற்றோட்டத்தை பேணுவதற்கு தான். மேலிருந்து 
கீழாகவும் கீழிருந்து மேலாகவும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகவும் 
சமநிலையுடனும் இருக்கவே அரை நாண் கொடி பயன்படுகிறது

 அத்துடன் ஆண் பெண் 
மலட்டுத்தன்மையை நீக்கவும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் அரை நாண் கொடி 
பயன்படுகிறது. 

மோதிரம் அணிதல் 

விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு 
திறன், அழகான குரல் வளம் என்பவற்றுக்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் 
அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை 
ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. அதனால்தான், திருமண 
மோதிரம் கட்டாயமாக மோதிரவிரலில் அணிய கட்டயாப்படுத்தப்படுகிறது 

விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் 
என்பவை நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணிதல் 
தடுக்கபடுகிறது ஏன் என்றால் இதய கோளாறுகள் ஏற்படும். 

மூக்குத்தி அணிதல் 

மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு 
பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறு 
குழந்தைகளுக்கு மூக்குத்தி குத்தும் பழக்கம் இல்லை. பருவப்பெண்களே 
மூக்குத்தி அணிய வேண்டும் .பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் 
சில வாயுக்கள் காணப்படுகிறது 

இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் 
பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் 
நிவர்த்தியாகும்.காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் 
பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும்

 வலது புறமாக சுவாசம் 
செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான 
சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. நமது மூளையின் 
அடிபகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள் 
உணர்ச்சி களை செயல்படுத்தும்

 இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்கு 
அதிகப்படுத்த மூக்குத்தி அவசியப்படுகிறது.பெண்களின் இடதுபுற மூக்கில் 
குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும் வலது புற மூக்கில் 
குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளது

இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் 
தான் அணிய வேண்டும்

 இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு 
நிலைப்படுத்தபடுகிறது.நமது முன் நெற்றிப்பகுதியில் இருந்து சில நரம்புகள் 
மூக்கு தூவாரம் வரை கீழ் இறங்கி மூக்கு பகுதியில் மெல்லிய துவாரங்களாக 
இருக்கும்

 இதில் அணியப்படும் தங்க மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்து 
குளிர்ச்சி அளிக்கும். மூக்கு மடலில் ஏற்படுத்தப்படும் துவாரம் நரம்பு 
மணடலத்தில் உள்ள அசுத்த வாயுவை அகற்றும்

 ஒற்றைத்தலைவலி, நரம்பு நோய்கள், 
உள்ளச்சோர்வு ஏற்படாமல்  மூக்குத்தி தடுக்கிறது. 

காதணி அணிதல் ( தோடு அணிதல்)  

தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த 
ஆபரணத்தை ஆண்களில் ஒரு பிரிவினர் அணிவார்கள்

 காது குத்துதல் என்பது 
தமிழ் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. உலோகம், 
கண்ணாடி போன்றவற்றால் காதணிகள் அணியப்படுகிறது

 காது சோனையில் 
துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே மேலும் 
வயிறும் கல்லீரலும் தூண்டப்படும் ஜீரணக்கோளாறு, கண்பார்வை கோளாறு 
சரியாகும். 

வளையல் அணிதல் 

வளையல் என்பது பாரம்பரிய அணிகலனாகும். தங்கம் மற்றும் கண்ணாடி வளையல் 
ஆரம்பகாலத்தில் அணிந்தாலும் தற்பொழுது பிளாஸ்டிக் வளையல்களின் பயன்பாடு 
அதிகரித்துள்ளது

 வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைப்பாடுகளை களைவதாகும். பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் அக்காலத்தில் இறுதிவரை வளையல் அணிதல் கட்டாயமாக்கப் பட்டு இருந்தது

அதிலும் கர்ப்பமான பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு முக்கியம் பெறுகிறது நமது பாரம்பரியத்தில்

 வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும் உடல் சூடு தனியவும் இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது 

இந்த பாரம்பரியம் மிக்க தமிழ் கலாச்சாரத்தை நாம் பின்பற்றி வாழ வேண்டும் 

திருச்சிற்றம்பலம் 

இப்படிக்கு சிவனடிசீரே பரவுவார் சிவ சுப்பிரமணி சைவ சித்தாந்த சபை ஒசூர்

No comments:

Post a Comment