Sunday, January 31, 2016

சிவன் மந்திர உச்சாடணங்கள்

சிவன் மந்திர உச்சாடணங்கள்
மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.
அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்தமந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில்தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். 

குரு மூலம் மந்திர உபதேசம் பெறுவதே மிகச்சிறந்தது. ஏன்  என்றால் குருவே நமது தவறுகளை திருத்தி அருள்புரிபவர். நமது இந்து மதம் குரு சிஷ்ய பரம்பரையை கொண்டது. குருவே அனைத்திலும் உயர்ந்தவர். குருவே தெய்வம். குருவே கடவுள். 

இனி மந்திரங்களை பார்ப்போம். 

தத்புருஷ மந்திரம்

இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.

1. "நமசிவயம் லங்க நமசிவய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.

2. "அலங்கே நமசிவய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.

3. "அங் சிவய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.

4. "ஊங்கிறியும் நமசிவய நம" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.

5. "ஓம் நமசிவய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.

அகோர மந்திரம்

இதன் மூல மந்திரம் "நமசிவ",

"சங் கங் சிவயநம" என உச்சரிக்கஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவய நம" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவய நம" என உச்சரிக்கவானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவய" என உச்சரிக்க மழை உண்டாகும்

வாமதேவ மந்திரம்
"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.

சத்யோசாத மந்திரங்கள்

"சிவய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும். 

ஈசான மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

மொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு.

மொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு. 

அவற்றையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

1. தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். 

இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.

நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். 

இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்]  செய்வது உத்தமம் ஆகும்.

3. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். 

இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை]  செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். 

இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். 

பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். 

இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7. தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர  கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். 

இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். 

இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். 

இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு  ஈசன் ஈடு இணையில்லா  அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். 

எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். 

இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர்,  சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. 

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். 

மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். 

அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். 

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். 

இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. சந்திரன் - மனோ காரகன்.... 

சந்திரன் பலம் இழந்து ஜாதகத்தில் இருக்க , அவருக்கு சந்திர தசை நடக்கும்போது - சிலருக்கு புத்தியே பேதலித்து விடுகிறது.  

சந்திர தசை - சனி புக்தி   அல்லது சனி தசை - சந்திர புக்தி -  இரண்டும் - அவ்வளவு மோசமான நேரங்கள் . 

எந்த நேரமும் அடியவர்களுக்கு நல்ல நேரமே. 

நவ கோள்களும் நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல அடியார்க்கு மிகவே என்னும் சம்பந்த பிரான் வாக்கிற்கிணங்க நீங்கள் சோம வார விருதம், சோம வார பிரதோஷ விருதம் இரண்டையும் கடை பிடியுங்கள். 

அதன் பின் சனி உட்பட எந்த கோளாலும் உங்களை பிடிக்க முடியாது. 

கோளறு பதிகம் சொல்லி ஈசனை 9 முறை தினமும் வலம் செய்யுங்கள். 

பின்னர்  நவ கோள்  மகிழ்ந்து நம்மை வலம் செய்திடும்  உனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டும் என்று கேட்கும்.  

நவ கோள் உட்பட அண்டத்தில் உள்ள யாவும் அரனின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்குபவையே. 

12. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். 

அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். 

பின்னர்  ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

13. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். 

அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். 

பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

14. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். 

இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். 

பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

15. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம்.  

இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

16. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். 

தாருகா வனத்து ரிஷிகள். 

`நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். 

ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். 

தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

17. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். 

இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. 

இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

18. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. 

தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். 

எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். 

நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

19. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

20. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. 

இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

21. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. 

அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும். 

இதில் நீங்கள் ஏதேனும் ஒருவகை பிரதோஷ விருதம் கடை பிடித்தாலும், அனைத்து பிரதோஷ விருதங்களையும் கடைப்பிடித்தாலும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று அதை சிந்தை மகிழ நீங்கள் கடைபிடித்தால் முந்தை வினைகள் அனைத்தும் நீங்கும். 

அஷ்ட லக்ஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் வாசம் செய்வார்கள். 

கஷ்டங்கள் யாவும் விலகும். 

அனைத்து தோஷங்களும் பிரதோஷ விருதத்தால் நீங்கும். 

ஆனால் ஒரே ஒரு தோஷம் மட்டும் அதனால் நமக்கு வரும். 

அது, சந்தோஷம் ஆகும்.

Thursday, January 28, 2016

2016 மைத்ர முகூர்த்தம்

2016 மைத்ர முகூர்த்தம்.
-------------------------------------
கடனால் பாதிக்கப்பட்டவர்கள்,க்டன் சுமை உள்ள்வர்கள் கீழ்கண்ட நேரத்தில் யாருக்கு பணம் கொடுக்க வேண்டுமோ அவர் பெயரை சொல்லி ஒரு சிறு தொகையை எடுத்து தனியாக வைத்தால் கடன் சீக்கிரமாக அடையும் என சாஸ்திரம் கூறுகிறது.

*2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40
*6.2.16 சனி காலை 6 முதல் 6.30 வரை
*6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
*6.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
*13.2.16 சனி காலை 10.43 முதல் 12 வரை
*20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
*20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை
*20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
*29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை
*1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 1.22 வரை
*12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை
*28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை
*8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை
*24.4.16 ஞாயிறு இரவு 8.40 முதல் 10.40 வரை
*6.5.16 வெள்ளி காலை 4.36 முதல் 6.36 வரை
*22.5.16 ஞாயிறு மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
*2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை
*18.6.16 சனி மாலை 4.12 முதல் 6.12 வரை
*29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை
*2.7.16 சனி காலை 6.52 முதல் 8.52 வரை
*2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை
*2.7.16 சனி மாலை 6.52 முதல் இரவு 8.52 வரை
*15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
*26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
*12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
*22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை
*8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை
*19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை
*5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
*6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
*16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை
*2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
*13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
*26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
*26.11.16 சனி மாலை 4.40 முதல் 6.40 வரை
*26.11.16 சனி இரவு 10.40 முதல் 12.40 வரை
*29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை
*10.12.16 சனி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
*25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
*26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
*27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை

அன்புடன் 
பணவளக்கலை 
MONEY ATTRACTION WORKSHOP

When u r ready everything will be ready

When the student is ready, the teacher appears.

When the thinker is ready, the idea appears.

When the artist is ready, the inspiration appears.

When servant is ready, the purpose appears.

When the athlete is ready, the performance appears.

When the leader is ready, the vision appears.

When the lovers is ready, the partner appears.

When the disciple is ready, God appears.

When the teacher is ready, the student appears.

When the receiver is ready, the gift is appears.

Page 191, Your Life Loves You

எப்படி வந்தது குடியரசு:

எப்படி வந்தது குடியரசு: நாடு சுதந்திரம் பெறும் முன், பல சுதந்திர போராட்ட தலைவர்களும் ஆங்கிலேயரிடம் இருந்து “டொமினியன்’ அந்தஸ்து பெற்றால் போதும் என எண்ணினர். டொமினியன் அந்தஸ்து என்பது, பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். இதற்கு நேரு, நேதாஜி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், முழுமையான சுயராஜ்யம் தான் லட்சியம் என சுதந்திர போராட்ட தலைவர்களிடம் மாற்றம் வந்தது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள், தங்கள் விருப்பத்துக்கு செயல்படக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது. 
இதுதான் குடியரசு என்பது.
Good morning 🙏🏻

அன்பே சிவம் - இது சரியானதா ?

திருச்சிற்றம்பலம்.

அன்பே சிவம் - இது சரியானதா ?

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”
                                                 -திருமந்திரம் 270-

அன்பே சிவம் என்று பலரும் பல இடங்களில் சொல்கிறோம். பல சமயப் பிரசாரகர்களும்கூட அன்பே சிவம் என்று பேசியும், எழுதியும் வருவதையும் பார்க்கிறோம். இந்த வரி மேற்சொன்ன திருமந்திரப் பாடலில் வருகின்றது. இதை கடவுள் அன்பு வடிவானவர் என்ற பொருளிலேயே புரிந்து கொண்டிருக்கிறோம்; இவ்வாறே சொல்லியும் வருகின்றோம். நமது பத்தாம் திருமுறையான திருமந்திரத்தில் இவ்வாறு சொல்லியிருப்பது பற்றி நமக்கு சற்றுப் பெருமையும் கூட. மனித நேயம் பேசும் நவீன உலகில் அன்பே சிவம் என்று நமது சைவத்தில் கூறியிருக்கின்றது என்று கூறி நம்மையும் இந்த மனித நேயவாதிகளுடன் சேர்த்து அடையாளம் காட்டப் பிரயத்தனம் பண்ணுகிறோம். 

கிறிஸ்தவம் கடவுள் அன்பு வடிவானவர் என்று சொல்கின்றது. இஸ்லாம் அளவற்ற அன்பாளன் என்று இறைவனைச் சொல்லுகின்றது. ஆயினும் சைவத்தில் கடவுள் அன்புள்ளவர்; அன்பே வடிவானவர் என்று சொன்னால் உண்மையில் அது கடவுளுக்கு ஒரு குறையாகவே கருதப்படும். 

ஒருவர் இன்னொருவர் மாட்டு ஒரு எதிர்பார்ப்புடன் செலுத்தப்படுவதே அன்பு. நாம் சகமனிதர்கள் மேல் காட்டுவது அன்பு. பக்தர்கள் இறைவன் மாட்டுச் செலுத்துவது அன்பு. இவை எல்லாம் வெளிப்படையாகவோ அல்லது உட்கிடையாகவோ ஒரு எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். கணவன் மனைவியிடம் அன்பு செலுத்துகிறான் என்றால் அவளின் அன்பையும், கவனிப்பையும் அதற்கு பிரதிபலனாக எதிர்பார்க்கிறான். ஒரு தலைக் காதலின் வலி என்ன என்பது உங்களுக்குப் புரியும். நீங்கள் இன்னொருவர் மீது அன்பு செலுத்தியும், இன்னொருவர் உங்கள் மீது அன்பு செலுத்தவில்லையானால், அந்த அன்பு முழுவதும் வேதனையாகத் திரும்பி வந்து நம்மைத் தாக்கும். ஒரு தாய் தனது பிள்ளையிடம் அன்பு செலுத்துகிறாள் என்றால் பிள்ளையின் பாசத்தையும், சந்தோசத்தையும் பிரதிபலனாக எதிர்பார்க்கிறாள். இதேபோல நாம் இறைவனிடம் காட்டுகிற அன்பு அவனின் அருளையும், கவனிப்பையும் வேண்டி நிற்பதால் இதுவும் ஒரு எதிர்ப்பாரப்பைக் கொண்டதாகும்.

இறைவன் நம்மாட்டு செலுத்துவது அல்லது காட்டுவது அன்பு அல்ல; அது அருள் ஆகும். அருள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாதது. மேலான ஒருவரால் கீழான நிலையில் உள்ளவரிடத்துக் காட்டப்படுவது அருள். அது இறைவனுக்கு மட்டுமே உரியது. இறைவன் அருள் வடிவானவன் என்று கூறுவதே நிறைவானது. இறைவன் அன்பு வடிவானவன் என்று கூறுவது குன்றக்கூறல் என்ற வழுவுடையதாய் இறைவனைக் குறைத்துச் சொல்வதாய் முடிவதால் அபசாரம் ஆகும். இறையுடன் ஒன்றிய மெய்யடியார்களுக்கும் இறையினுடைய இயல்புகள் பொருந்தி வருவதால் இல்லறத்தாருக்கு அன்பை வலியுறுத்திய திருவள்ளுவர், துறவிகளுக்கே அருளை வலியுறுத்துகிறார். 

அப்படியானால் மேற்சொன்ன திருமந்திரப் பாடலுக்கு என்ன பொருள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அங்கு அன்பு என்பது அன்பு செலுத்தும் அடியார்களைக் குறிக்கின்றது. இதை ஆகு பெயர் என்று இலக்கணத்தில் சொல்லுவர். கீரை விற்பவளை கீரை என்று அழைப்பது போல இறைவனிடம் அன்பு செலுத்தும் அடியார்களை அன்பு என்று குறிக்கின்றது இப் பாடல். இப்போது இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போம். 

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் - மெய்யடியார்களும் இறைவனும் வேறு வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள் அறிவில்லாதவர்கள்..

அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார் - மெய்யடியார்கள் சிவமாக ஆவதை யாரும் அறிவதில்லை.

இதையே மாணிக்கவாசகர் " சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட"என்று திருவாசகத்தில் பாடுகின்றார். இதையே "அவனேதானே ஆகிய அந்நெறி ஏகன் ஆகி" என்று சிவஞானபோதம் பத்தாம் சூத்திரம் சொல்லுகின்றது. " தன்னையடைந்தார் தம்மைத் தானாக்கித் தலைவன்"  என்று சிவஞான சித்தியார் இதனைக் கூறுகின்றது. "தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ் சத்தி"  என்று இதனை திருவருட் பயன் கூறுகின்றது. இது சைவ சித்தாந்தம் கூறும் ஆன்மா சிவமாகி இருந்து அனுபவிக்கும் சுத்த அத்துவித முத்தி நிலையைக் குறிப்பதாகும்.

இதையே திருமூலர் திருமந்திரத்தின்இன்னொரு பாடலிலே பின்வருமாறு கூறுகின்றார்.

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராதாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த முத்தியே
                                         -திருமந்திரம் 1437-

இதுவே வேத உபநிடத மகாவாக்கியங்களின் பொருளுமாகும்.

அஹம் பிரம்மாஸ்மி - நான் பிரம்மம் என்பதல்ல, நான் பிரம்மமாய் இருக்கிறேன் என்பதே இதன் பொருள். அஸ்மி-இருக்கிறேன்.

தத்துவ மஸி - நீயே அது என்பதல்ல, நீயே அதுவாக ஆகிறாய் என்பதே பொருள். அஸி- ஆகுதல்.

அன்பே சிவமாவது - அன்பே சிவம் அல்ல, அன்பை சிவம் ஆவது என்று பொருள். அன்பு - அன்பு செய்கின்ற மெய்யடியார். .

அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின் - மெய்யடியார்கள் இறுதியில் சிவமாகவே ஆகும் ஏகநிலையில் இறையுடன் கலப்பர் என்ற உண்மையை அறிந்த பின்னர்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே - தாமும் அந்த ஏகபோகநிலையில் சிவமாய் ஆகி அமர்ந்நதிருப்பர். 

இந்த பாடலில் எல்லா இடத்திலும் அன்பு என்று சுட்டப்படும் அடியார்கள் சிவமாவது பற்றியும், சிவமாய் அமர்வது பற்றியும் கூறப்படுகின்றது. இதை அன்பே சிவம் என்று பொருள் கொண்டால் அது சங்கரர் கூறும் அத்துவித நிலை ஆகும். ஆயினும் இங்கு "சிவம் ஆவது",  "சிவமாய்" என்ற சொற்களுக்குப் பொருள் கூறுவதில் இடர் ஏற்படுகின்றது. இதுவே சங்கரர் கூறும் அத்துவித நிலைக்கும் சைவ சித்தாந்தம் கூறும் அத்துவித நிலைக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு. முன்னதைக்கேவலாத்துவிதம் என்றும் பின்னதைச்சுத்தாத்துவிதம் என்றும் கூறுவர். 

எவ்விதமாய்ப் பார்த்தாலும் இங்கு அன்பு என்பது அடியவர்களைக் குறிக்கின்றதே அன்றி இறைவன் அன்பு வடிவானவர் என்று அபசாரமாகக் குறிக்கப்படவில்லை. 

ஆகவே, இறைவன் அருள் வடிவானவன் என்று கூறுவதே நிறைவானது. இறைவன் அன்பு வடிவானவன் என்று கூறுவது குன்றக்கூறல் என்ற வழுவுடையது. இது இறைவனைக் குறைத்துச் சொல்வதாய் முடிவதால் அபசாரம் ஆகின்றது. 

திருச்சிற்றம்பலம்.

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள்

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள்

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள். கடுக்காய்தான் அது.

அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.
மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

கடுக்காய் வகைகள் :

பிஞ்சு கடுக்காய், 
கருங்கடுக்காய், 
செங்கடுக்காய், 
வரிக்கடுக்காய், 
பால்கடுக்காய் 
என, பல வகைகள் உண்டு. கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும்.

இவை தவிர, 
காபூல் கடுக்காய், 
சூரத் கடுக்காய் 
எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

# பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.
# கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.
# செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.
# வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.
# பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்
என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.
கடுக்காயை 
விஜயன், 
அரோகினி, 
பிருதிவி, 
அமிர்தமரிதகி, 
த்ருவிருத்தி 
என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.
உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து.
மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.
“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு” 
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.
பசியின்மையைப் போக்கும் கடுக்காய் :
பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.
ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள். துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.
சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய் :
கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.
கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.
திரிபலா பெருமைகள் :
திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.
எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம்.

Tuesday, January 26, 2016

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..

2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். 

தண்ணீர் :

3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.

4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.

5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.

சிமெண்ட் :

7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.

8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.

9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.

மணல் :

10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.

13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.

இரும்புக் கம்பிகள் :

14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.

செங்கல் :

17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.

19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.

20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.

21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.

22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.

23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.

24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.

25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.

26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.

27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.

28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.

29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.

31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.

32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம். 

33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.

34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.

35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.

37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.

38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.

39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.

40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.

42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.

43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.

44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.

45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :

46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.

47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.

48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.

49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.

50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.


Monday, January 25, 2016

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..

2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். 

தண்ணீர் :

3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.

4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.

5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.

சிமெண்ட் :

7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.

8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.

9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.

மணல் :

10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.

13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.

இரும்புக் கம்பிகள் :

14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.

செங்கல் :

17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.

19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.

20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.

21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.

22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.

23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.

24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.

25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.

26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.

27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.

28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.

29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.

31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.

32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம். 

33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.

34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.

35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.

37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.

38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.

39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.

40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.

42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.

43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.

44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.

45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :

46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.

47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.

48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.

49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.

50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.


Saturday, January 23, 2016

சித்தர்கள்மலையில்தவம்செய்வதுஏன்?

#எல்லாஉயிரும்சிவமாகட்டும்

#சித்தர்கள்மலையில்தவம்செய்வதுஏன்?
#சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?

பொதுவா எல்லாருக்கும் இருக்கிற கேள்வி இது. மலை அப்படினாலே அமைதியா, மத்த சாதாரண மனுஷங்களோட தொந்தரவு இல்லாம, அருவிகள், சுனைகள், மூலிகைகள் இருக்கிற ஒரு இயற்கையான இடம். இதைத்தவிர நம்ம புராணங்கள்லேயும் மலைகளை பத்தி பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு.

இதைப்பத்தி பெரிய குரு ஒருத்தர் சொன்னத இணையத்துல படிச்சேங்க...அதை அப்படியே உங்களுக்கு தரேன்.
நமது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது.அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது.

திருவண்ணாமலை கூட அல்ல அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளி மண் கூட சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது.
ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார்.
காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார்.

திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வர் ஆலயத்திலிருந்தே அண்ணாமலையை தரிசித்துள்ளார்.அன்னை ஆதிபராசக்திக்கு விந்தியா சல நிவாசினி என்று ஒரு பெயர் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் விந்திய மலையில் வாசம் புரிபவள் என்பதாகும்.உச்சி பிள்ளையாரும், ஐயப்பனும் மலையிலேயே இருக்கிறார்கள்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என வழிபடப்படுகிறது.பராம்பரியமான சந்நியாசகளின் ஒரு பிரிவினருக்கு கிரி என்ற மலை பெயரே சந்நியாச நாமமாக கொடுக்கப்படுகிறது.இவை எல்லாம் இந்து பராம்பயத்தில் மலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும்.ஏசுநாதர் கூட கொல்கொதா மலையில் தான் முதல் பிரசங்கத்தை துவங்கினார்.
கல்வாரி மலையில் தான் சிலுவையில் அறையப்பட்டார்.
ஆகவே மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு உலகம் முழுவதும் இருந்து வருகிறது.
அதற்கு காரணம் என்ன? மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும்.

மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலைகள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும்.
இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன. இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது

#எல்லாஉயிரும்சிவமாகட்டும்
#ருத்ராட்சம் வேண்டுமெனில் தொடர்புக்கு:
#ஜல்லியார்செல்வம்@ #Gஅத்தியப்பன்
அலைபேசி:7708557755,7708558855
#எல்லாஉயிரும்சிவமாகட்டும்
#சிவாயநம #சிவாயநம #சிவாயநம #சிவாயநம
#சென்னையிலிருந்தும்,#பாண்டிச்சேரியிலிருந்தும் தமிழகமெங்கும் ஆன்மீக ஆனந்தசுற்றுலா எடுக்கிறோம்.இதில் கலந்து கொள்ள விரும்பும் ஆன்மீக அன்பர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள. தொடர்பு கொள்ளுங்கள்.அடியேன் சிவனாரின் மீளா அன்பு அடிமை சிவதோழன் உங்கள்
#ஜல்லியார்செல்வம்@ #Gஅத்தியப்பன்
தொடர்புக்கு;7708557755,7708558855,0413-2666167
www.jalliyaar.com

Friday, January 22, 2016

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்.

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்.

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?

அ – உயிரெழுத்து.

ம் – மெய்யெழுத்து .

மா – உயிர் மெய்யெழுத்து.

அதே போல தான் அப்பா

தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண்,காது,மூக்கு,உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன.தயவுசெய்து அனைவருக்கும் பகிரவும் (Please Share)

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்.

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்.

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?

அ – உயிரெழுத்து.

ம் – மெய்யெழுத்து .

மா – உயிர் மெய்யெழுத்து.

அதே போல தான் அப்பா

தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண்,காது,மூக்கு,உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன.தயவுசெய்து அனைவருக்கும் பகிரவும் (Please Share)

உங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தை

உங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் ஜபிக்கவும். வாழ்வில் அற்புதமான மாற்றத்தை உணர்வீர்கள்.

அஸ்விணி 1-4
பரணி 5-8
கார்த்திகை 9-12
ரோஹிணி 13-16
மிருகசீரிடம் 17-20
திருவாதிரை 21-24
புனர்பூசம் 25-28
பூசம் 29-32
ஆயில்யம் 33-36
மகம் 37-40
பூரம் 41-44
உத்திரம் 45-48
ஹஸ்தம் 49-52
சித்திரை 53-56
சுவாதி 57-60
விசாகம் 61-64
அனுசம் 65-68
கேட்டை 69-72
மூலம் 73-76
பூராடம் 77-80
உத்திராடம் 81-84
திருவோணம் 85-88
அவிட்டம் 89-92
சதயம் 93-96
பூரட்டாதி 97-100
உத்திரட்டாதி 101-104
ரேவதி 105-108

விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந: ||                  1 

பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ் ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ க்ஷர ஏவ ச ||           2 

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபுஸ் ஸ்ரீமாந் கேஸவ: புருஷோத்தம:   ||             3 

ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர:  ||                4 

ஸ்வயம்புஸ் ஸம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வந: |
அநாதி நிதநோ தாதா விதாதா தாதுருத்தம: ||                     5 

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ: பத்மநாபோ அமரப்ரபு: | 
விஸ்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ: ||   6 

அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தந: |
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||                  7 

ஈஸாந: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: ||              8 

ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: | 
அநுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவாந்||                9 

ஸுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வதர்ஸந: ||      10 

அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமே யாத்மா ஸர்வயோக விநிஸ்ருத: ||               11 

வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||           12 

ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வயோநிஸ் ஸுசிஸ்ரவா: |
அம்ருதஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: ||   13 

ஸர்வகஸ் ஸர்வவித்பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: ||         14 

லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: ||            15 

ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி: புநர்வஸு: ||              16 

உபேந்த்ரோ வாமந: ப்ராம்ஸு ரமோகஸ் ஸுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்க்ரஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||        17 

வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரயோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||       18 

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸ்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத் ||          19 

மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்கதி: |
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: ||         20 

மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||                  21 

அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந்ஸ்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா ||    22 

குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: ||               23 

அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 24 

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா ஸம்வருதஸ் ஸம்ப்ரமர்த்ந: |
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர: ||              25

ஸுப்ரஸாத: ப்ரஸந் நாத்மா விஸ்வருக் விஸ்வபுக் விபு : |
ஸத்கர்த்தா ஸதக்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர: ||      26 

அஸங்க்யேயோ ப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச் சுசி: |
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந: ||   27 

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தநோ வர்த்தமாநஸ்ச விவிக்தஸ் ஸுருதி ஸாகர: ||          28 

ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந: ||             29 

ஓஜஸ்தேஜோ த்யுதிர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி: || 30 

அம்ருதாம் ஸூத்பவோ பாநு: ஸஸபிந்து ஸுரேஷ்வர: |
ஔஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்யதர்ம பராக்ரம: ||              31 

பூதபவ்ய பவந்நாத: பவந: பாவநோ நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத ப்ரபு: ||                 32 

யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஸந: |
அத்ருஸ்யோ (அ)வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜிதநந்தஜித்||        33 

இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட: ஸிகண்டி நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வபாஹுர் மஹீதர: ||        34 

அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ: |
அபாந்நிதி ரத்ஷ்டாந மப்ரமத்த: ப்ரதிஷ்டித: ||                     35 

ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹந: |
வாஸுதேவோ ப்ருஹத்பாநுர் ஆதிதேவ: புரந்தர: ||                36 

அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூரஸ் ஸௌரிர் ஜநேஸ்வர: |
அநுகூலஸ் ஸதாவர்த்த: பத்மீ பத்ம நிபேக்ஷண: ||                37 

பத்மநாபோ அரவிந்தர்க்ஷ: பத்மகர்ப்பஸ் ஸரீரப்ருத்|
மஹர்த்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||      38 

அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: ||         39 

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவா நமிதாஸந: ||                   40 

உத்பவ: க்ஷோபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப: பரமேஸ்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ: ||             41 

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநோதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுபேக்ஷண: ||          42 

ராமோ விராமோ விரஜோ மார்கோ நேயோ நயோநய: |
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம: ||        43 

வைகுண்ட: புருஷ ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயு ரதோக்ஷஜ: ||     44 

ருதுஸ் ஸுதர்ஸந: கால: பரமேஷ்டி பரிக்ரஹ: |
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண: ||   45 

விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம்|
அர்த்தோ நர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந: ||     46 

அநிர்விண்ணஸ் ஸ்தவிஷ்டோபூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷாம: க்ஷாமஸ் ஸமீஹந: ||             47 

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்||       48 

ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷ்ம ஸுகோஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத்|
மநோ ஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: ||              49 

ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்ப்போ தநேஸ்வர: ||          50 

தர்மக்ருத் தர்மகுப் தர்மீ ஸதஸத் க்ஷரமக்ஷரம்|
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராமஸூர் விதாதா க்ருதலக்ஷண: ||         51 

கபஸ்தநேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூதமஹேஸ்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு: ||        52 

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞாநகம்ய: புராதந: |
ஸரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||                 53 

ஸோமபோம்ருதபஸ் ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜயஸ் ஸத்யஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி: ||  54 

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமிதவிக்ரம: |
அம்போநிதி ரநந்தாத்மா மஹோததி ஸயோந்தக: ||                55 

அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதந: |
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||              56 

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதிநீபதி: |
த்ரிபதஸ் த்ரிதஸாத் யக்ஷோ மஹாஸ்ருங்க: க்ருதாந்த க்ருத்||    57 

மஹாவராஹோ கோவிந்தஸ்  ஸுஷேண: கநகாங்கதீ|
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர: ||                58 

வேதாஸ் ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோ த்ருடஸ் ஸங்கர்ஷணோச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: ||        59 

பகவாந் பகஹா நந்தி  வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிர் ஆதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதிஸத்தம: ||      60 

ஸுதந்வா கண்ட பரஸுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: ||       61 

த்ரிஸமா ஸாமகஸ்ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்|
ஸந்யாஸக்ருச் சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி: பராயணம்||      62 

ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரேஷ்டா குமுத: குவலேஸய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷ ப்ரிய: ||     63 

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் ஸ்ரீவாஸ: ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர: ||             64 

ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீநிதிஸ் ஸ்ரீவிபாவந: |
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய: ||          65 

ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர: | விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்நஸம்ஸய: ||          66 

உதீர்ணஸ் ஸர்வதஸ்சக்ஷு ரநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர: |
பூஸயோ பூஷணோ பூதிர் விஸோக: ஸோகநாஸந: ||             67 

அர்ச்சிஷ்மா நர்ச்சித: கும்போ விஸுத்தாத்மா விஸோதந: |
அநிருத்தோ ப்ரதிரத: ப்ரத்யும்நோ அமித விக்ரம: ||                68 

காலநேமி நிஹா வீரஸ் ஸௌரி ஸூர  ஜநேஸ்வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ கேஸிஹா ஹரி: ||        69 

காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேஸ்யவபுர் விஷ்ணுர் வீரோநந்தோ தநஞ்ஜய: ||             70 

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: ||     71

மஹாக்ரமோ மஹாக்ரமா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: ||          72 

ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய: ||                    73 

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநாஹவி: ||            74 

ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண: |
ஸூரஸேநோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸ் ஸுயாமுந: ||         75 

பூதாவாஸோ வாஸுதேவஸ் ஸர்வாஸு நிலயோ நல: |
தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்தரோ தாபராஜித: ||             76 

விஸ்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்தி ரமூர்த்திமாந்|
அநேகமூர்த்தி ரவ்யக்தஸ் ஸதமூர்த்திஸ் ஸதாதந: ||              77 

ஏகோ நைகஸ் ஸவ: க:கிம் யத்தத் பதமநுத்தமம்|
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: ||              78 

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங்கதீ|
வீரஹா விஷமஸ் ஸூந்யோ க்ருதாஸீ ரசலஸ்சல: ||             79 

அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமி த்ரலோக த்ருத்|
ஸுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்யமேதா தராதர: ||               80 

தேஜோ வ்ருக்ஷோ த்யுதிதரஸ் ஸர்வஸ் ஸத்ர ப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ: ||      81 

சதுர்மூர்த்திஸ் சதுர்பாஹும் சதுர்வ்யூஹஸ் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவஸ் சதுர்வேத விதேகபாத்||                  82 

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா||             83 

ஸுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ் தந்துவர்த்ந: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: ||                 84 

உத்பவஸ் ஸுந்தரஸ் ஸுந்தோ ரத்நநாபஸ் ஸுலோசந: |
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வவிஜ்ஜயீ||         85 

ஸுவர்ணபிந்து ரக்ஷோப்யஸ் ஸர்வவாகீஸ்வரேஸ்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி||           86 

குமுத: குந்தர: குந்த: பர்ஜந்ய: பாவநோ நில: |
அம்ருதாம் ஸோம்ருதவபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோமுக: ||       87 

ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ருதாபந: |
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந: ||       88 

ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்தஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந: |
அமூர்த்தி ரநகோசிந்த்யோ பயக்ருத் பயநாஸந: ||                  89 

அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹாந்| 
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந: || 90 

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத: |
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந: ||       91 

தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதாதம: | 
அபராஜிதஸ் ஸர்வஸஹோ நியந்தா நியமோயம: ||               92 

ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண: | 
அபிப்ராய: ப்ரயார்ஹோர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தந: ||            93 

விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் ஸுருசிர் ஹுதபுக் விபு: | 
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவிலோசந: ||              94 

அநந்தஹூதபுக் போக்தா ஸுகதோ நைகதோக்ரஜ: | 
அநிர்விண்ணஸ் ஸதாமர்ஷீ லோகாதிஷ்டாந மத்புத: ||            95 

ஸநாத் ஸநாத நதம: கபில: கபி ரவ்யய: | 
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: || 96

அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித ஸாஸந: | 
ஸப்தாதிகஸ் ஸப்தஸஹ: ஸிஸிரஸ் ஸர்வரீகர: ||               97 

அக்ரூர: பேஸலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம்வர: |
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்ரவண கீர்த்தந: ||                98 

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸவப்ந நாஸந: | 
வீரஹா ரக்ஷணஸ்ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தித: ||                99 

அநந்தரூபோ நந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ: | 
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ: ||            100 

அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் ஸுவீரோ ருசிராங்கத: | 
ஜநநோ ஜநஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம: | |                     101 

ஆதாரநிலயோ தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: | 
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: ||              102 

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத் ப்ராணஜீவந: |
தத்வம் தத்வ விதேகாத்மா ஜந்மம்ருத்யு ஜராதிக: ||             103 

பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதாமஹ |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹந: ||      104 

யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதந: | 
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்ய மந்நமந்நாத ஏவ ச ||              105 

ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந: | 
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாபநாஸந: ||               106 

ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்கதந்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத: ||             107 

வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ|
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோபி ரக்ஷது|| ................108.

Thursday, January 21, 2016

உலகத்தின் மாபெரும் ஸ்மார்ட் போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின்

உலகத்தின் மாபெரும் ஸ்மார்ட் போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒரு பத்திரிக்கையாளர் ஒரு முறை கேட்டார், "உங்கள் குழந்தைகள் ஐபேடை மிகவும்  விரும்புகிறார்களா?"

அதற்கு ஜாப்ஸ் கூறினார், "அவர்கள் இது வரை அதை உபயோகித்ததில்லை. அவர்கள் எவ்வளவு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்."

அமெரிக்காவின் சிலிகான் வேலியில், பல என்ஜினீர்களும் சாஃப்ட்வெர் நிபுணர்களும், தங்கள் குழந்தைகளை ஐ பேட், ஐ போன், ஆண்ட்ராய்டு போன், டேப்லெட், லேப்டாப் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த விடுவதில்லை. தங்கள் குழந்தைகளை கம்ப்யூட்டர்கள் இல்லாத பழைய கை முறைக் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள்.

அவர்கள் கூறுவது யாதெனில், "நாங்கள் தகவல் தொழில் நுட்பத்தின் பாதிப்பினை மிக அருகில் இருந்து கவனித்திருக்கிறோம். அது எங்கள் குழந்தைகளை பாதிக்க விடமாட்டோம்."

குழந்தைகள் மிகச்சிறிய வயதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கும் இந்தப் பிரச்னை தொடருமானால், எதிர்காலத்தில் குழந்தைகள் கற்பனைத்திறன், சுய சிந்தனை இல்லாத மனம் ஊனமுற்ற அரைகுறை வாழ்க்கையோடு வாழும் நிலை ஏற்படும். 

வெளியில் விளையாடித் திரிந்த கடைசி தலைமுறை நமதாகும். ஏனெனில் நம்மிடம் அப்போது லேப்டாப்கள் ஸ்மார்ட் போன்கள் இல்லை. கை வினை மூலம் அனைத்தையும் கற்றுக் கொண்டோம். தகவல்களை புத்தகங்கள் மூலமும் மற்றவரிடம் உரையாடுவது மூலமும் அறிந்து கொண்டோம். கூகிளில் அல்ல. பக்கத்துக்கு வீட்டுக்காரரை தெரிந்து கொள்ளாமல் பேஸ் புக்கில் எங்கோ உள்ள நபரிடம் பேசும் இந்த தலைமுறை அல்ல நமது. பல விதங்களில் விஷயங்களைக் கற்றுக்கொண்டது நம்மை முழு மனிதர்களாக மாற்றியது. குழந்தைகள் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது ஒரு ஆரோக்கியமான சுய சிந்தனை உள்ள எதிர்கால சூழலை அவர்களிடமிருந்து பறித்து விடும்.

எனவே அடுத்த முறை குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று யோசிக்கும்போது, அதி நவீன சாதனங்களை அவர்களிடம் கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலனை செய்யுங்கள். அவர்களை வெளியில் விளையாடவும் இயற்கையோடு ஒன்றி வாழவும் வாய்ப்பு கொடுங்கள். உங்களை அவர்கள் இப்போது வெறுப்பார்கள். ஆனால் கட்டாயம் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்றி தெரிவிப்பார்கள்.

Wednesday, January 20, 2016

இதைத்தான் கிணறுவெட்ட பூதம்

இதைத்தான் கிணறுவெட்ட பூதம் வருவது என்று சொல்வதோ.யாமறியோம் பராபரமே எல்லாம் உன்செயல் 

வேறு ஒரு விடயத்தைத் தேடும்போது இது வெளிவந்தது,
 
திருவள்ளுவரைப் பற்றி அறிந்ததும் அறியாததும் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்,

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ…..!!!

திருக்குறள் இரண்டடியிலும் திருவள்ளுவமாலை நான்கடியிலும் எழுதப் பட்டுள்ளது என்றே கூறவேண்டும் ஏனெனில் திருவள்ளுவர் பிறந்த ஊரைச் சரியாகச் சொல்லமுடியாத நமது சில ஆய்வாளர்கள்  க்கொருவதர்க்குத் தடயங்கள் இல்லாமல் ஆளுக்கொருவாறு கூறி உள்ளனரோ 

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

அனுமாருக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா ?

அனுமாருக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா ?

ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார். அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார். முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்தப் பின் அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார்.

'அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது ' என ஹனுமான் கேட்க, அதற்கு சீதாபிராட்டி, 'மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும்தான் எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே செந்தூரத்தை இட்டுக் கொண்டேன். ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும். 

அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே அதை இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி. 

அதைக் கேட்ட ஹனுமார் புல்லரித்துப் போய் ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும் என்ற மனதோடு ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம். அதனால் தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுகிறோம்.

Friday, January 15, 2016

தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள்

தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள்

1.அமரேசன் 2.அன்பழகன் 3.அழகப்பன் 4.பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6.சந்திரகாந்தன் 7.சந்திரமுகன் 8.தனபாலன் 9.தீனரீசன் 10.தீஷிதன் 11.கிரிராஜன் 12.கிரிசலன் 13.குக அமுதன் 14.குணாதரன் 15.குருமூர்த்தி 16.ஜெயபாலன் 17.ஜெயகுமார் 18.கந்தசாமி 19.கார்த்திக் 20. கார்த்திகேயன்.

21.கருணாகரன் 22.கருணாலயன் 23.கிருபாகரன் 24.குலிசாயுதன் 25.குமரன் 26.குமரேசன் 27.லோகநாதன் 28.மனோதீதன் 29.மயில்பிரீதன் 30.மயில்வீரா 31.மயூரகந்தன் 32.மயூரவாஹனன் 33.முருகவேல் 34.நாதரூபன் 35.நிமலன் 36.படையப்பன் 37.பழனிவேல் 38.பூபாலன் 39.பிரபாகரன் 40.ராஜசுப்ரமணியம்

41.ரத்னதீபன் 42.சக்திபாலன் 43.சக்திதரன் 44.சங்கர்குமார் 45.சரவணபவன் 46.சரவணன் 47.சத்குணசீலன் 48.சேனாபதி 49.செந்தில்குமார் 50.செந்தில்வேல் 51.சண்முகலிங்கம் 52.சண்முகம் 53.சிவகுமார் 54.சிஷிவாகனன் 55.செளந்தரீகன் 56.சுப்ரமண்யன் 57.சுதாகரன் 58.சுகதீபன் 59.சுகிர்தன் 60.சுப்பய்யா.

61.சுசிகரன் 62.சுவாமிநாதன் 63.தண்டபானி 64.தணிகைவேலன் 65.தண்ணீர்மலயன் 66.தயாகரன் 67.உத்தமசீலன் 68.உதயகுமாரன் 69.வைரவேல் 70.வேல்முருகன் 71.விசாகனன்.

72.அழகன் 73.அமுதன் 74.ஆறுமுகவேலன் 75.பவன் 76.பவன்கந்தன் 77.ஞானவேல் 78.குகன் 79.குகானந்தன் 80.குருபரன் 81.குருநாதன் 82.குருசாமி 83.இந்திரமருகன் 84.ஸ்கந்தகுரு 85.கந்தவேல் 86.கதிர்காமன் 87.கதிர்வேல் 88.குமரகுரு 89.குஞ்சரிமணாளன் 90.மாலவன்மருகன் 91.மருதமலை 92.முத்தப்பன் 93.முத்துக்குமரன் 94.முத்துவேல் 95.பழனிநாதன் 96.பழனிச்சாமி 97.பரமகுரு 98.பரமபரன் 99.பேரழகன் 100.ராஜவேல்.

101.சைலொளிபவன் 102.செல்வவேல் 103.செங்கதிர்செல்வன் 104.செவ்வேல் 105.சிவகார்த்திக் 106.சித்தன் 107.சூரவேல் 108.தமிழ்செல்வன் 109.தமிழ்வேல் 110.தங்கவேல் 111.தேவசேனாபதி 112.திருஆறுமுகம். 113.திருமுகம். 114.திரிபுரபவன் 115.திருச்செந்தில் 116.உமைபாலன் 117.வேலய்யா 118.வெற்றிவேல்.

முருகா முருகா என்று மூச்செல்லாம் விட்டிடுவேன் உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்.

Wednesday, January 13, 2016

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறை

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து
செல்லும்போது அது சுத்தமாகவும்
நேர்த்தியாகவும் இருந்ததைக்
கண்டு உள்ளே சென்றார்.
எல்லாப் பொருட்களும் அழகாக
அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம்
இருப்பதைப் பார்த்தார்.
அதை எடுத்துப் பார்த்தார்.
அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.
பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன்
உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.
அதில் இவ்வாறு எழுதியிருந்தது:
அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக்
கடிதத்தை எழுதுகிறேன்.
என்னை மன்னித்து விடுங்கள்.
என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை
விட்டுப்போகிறேன்.
உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு
தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை.
அதனால் சொல்லாமல்
போகிறேன்.
டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு
அடிமையாக்கிவிட்டது.
நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப்
புரியும்.
உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும்,
அவன் நல்லவன்.

டிமோத்திக்கும்
எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும்
(இப்போதெல்லாமமல் 42 ஒரு வயதல்ல),
அவனிடம்
பணமில்லா் இருந்தாலும் எங்கள் உறவு
உறுதியானது.
டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும்,
எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி
இடம் கொடுத்திருக்கிறான்.
்.
டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது.
அங்கு நாங்கள் தங்கியிருப்போம்.
அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான்.
அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று
வாழ்க்கை நடத்துவோம்.
கஞ்சாவை நானும் புகைத்தேன்.
ரொம்ப சுகமாயிருக்கிறது.
மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து
கண்டுபிடிக்க வேண்டுமென்று
வேண்டிக்கொள்ளுங்கள்.
ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி
எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான்.
அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக்
கவலைப் படாதீர்கள்.
எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள
தெரியும்.
எனக்கு பதினைந்து வயதாகிறது.
என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம்
உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.
உங்கள் அன்பு மகள்,
லிண்டா..!
அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது..
கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று
எழுதியிருந்தது..
துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:
பின்குறிப்பு;
அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும்
உண்மையில்லை.
நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான
விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிற
து.
இதையெல்லாம் பார்க்கும்போது நான்
பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி
பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே
கிடையாது.
எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது.
எடுத்து கையெழுத்து போடுங்கள்.
நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன்.
உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள். 😜

Yennamma ipadi panringleymaaaa... 😃😳😎😎😎😎😝😝😝😜😜

ஆண்டவனுக்கு

1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம்.

1.2 அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான்.

1.3 ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும்.

1.4 சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவ÷க்ஷத்ரம் ஆகும். இங்கு வசிப்பதுமச் சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது

1.5 முன் ஜன்மாவில் சிவ கைங்கர்ய உபகாரிகளாக வாழ்ந்தவர்கள், இந்த ஜன்மாவில், நல்ல உருவமும், தன ப்ராப்தியும் உடையவர்களாக காணப்படுவார்கள். சிவ தர்மத்தில் - பக்தியுடன், தன் சொத்துக்குத் தகுந்தபடி, ஆலயங்களை ஒவ்வொருவரும் செய்விக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிறிதாக அல்லது பெரிதாக செய்தாலும், தனவானுக்கும் ஏழ்மையானவர்களுக்கும், சமமான புண்யமே. பணக்காரராயினும், லோபமான மனஸுடன் பணத்தைக் குறைத்து சிவதர்மங்களைச் செய்பவர், அப்புண்ய பலனை அடைய மாட்டார். வாழ்வு நிலையற்றது; எனவே, ஒவ்வொருவரும் தன் சொத்தில் இரு பங்கு தர்மத்திற்கும், தனது வாழ்விற்கு ஒரு பங்குமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜீர்ணோத்தார தசகம்.

1.6 மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.

1.7 சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது.

1.8 ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம்.

1.9 விக்ரஹங்கள் பல திறத்தன: பொருள் பொதிந்து விளங்குவன. எடுத்துக்காட்டாக, இறைவன் உருவமற்றவன்: அருவமானவன். அவனுக்கு அருவுருவமாகிய லிங்க ப்ரதிஷ்டை கருவறையிலே. அவனுக்கே, மாகேச்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் 25 உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. (அவையாவன: 1. லிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. சந்திதர மூர்த்தி 4. கல்யாண சுந்தரர் 5. அர்த்த நாரீச்வரர் 6. ஸோமாஸ்கந்தர் 7. சக்ரவரதர் 8. திரிமூர்த்தி 9. ஹரிமர்த்தனம் 10. சலந்தராரி 16. திரிபுராரி 17. சரப மூர்த்தி 18. நீலகண்டர் 19. திரிபாதர் 20. ஏகபாதர் 21. பைரவர் 22. இடபாரூடர் 23. சந்திரசேகரர் 24. நடராஜர் 25. கங்காதரர்). இவை 25 விக்ரஹங்களுள் ஒவ்வொன்றும், பற்பல தத்துவங்களை உள்ளடக்கியவை. மீண்டும் எடுத்துக்காட்டாக, சோமாஸ்கந்த மூர்த்தியை எடுத்துக் கொண்டால், ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம் என்கிறார் காஞ்சிப் பரமாச்சாரியார். அவர் கூற்றுவது: ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரமண்யர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் அவர் (ஸுப்ரஹ்மண்யர்); ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.

1.10 இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்: (1) ச்ரவணம் - கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் - உதாரணம்: ஹனுமான், (2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை - உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள். (3) ஸ்மரணம் - நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது - உதாரணம்; ஸீதாதேவி, (4) பாதசேவனம் - சேவித்தல் - உதாரணம்: பரதன், (5) அர்ச்சனம் - பூஜித்தல் - உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார், (6) வந்தனம் - நமஸ்கரித்தல், வந்தித்தல் - உதாரணம்: விபீஷணன். (7) தாஸ்யம் - தொண்டு புரிதல் - உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர். (8) ஸக்யம் - சிநேக பாவம் - உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர். (9) ஆத்ம நிவேதநம் - தன்னையே அர்ப்பணித்தல் - உதாரணம்: ஜடாயு. இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு  போதுமானது. இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் வழிபட ஆலயங்களே வகை செய்வது குறிப்பிடத்தக்கது.

1.11 இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்: 1. அஹிம்சை. 2. தயை, 3. சத்யம், 4. அடக்கம் 5. வளம், 6. புலனடக்கம் 7. எளியோர்க்கு வழங்குதல், 8. தியாகம், 9. ஜபம், 10. தியானம் - அல்லது 1. அஹிம்சை, 2. சத்யம், 3. பிறர் பொருள் விழையாமை, 4. சிற்றின்பம் துறத்தல், 5. அவா ஒழித்தல், 6. க்ரோதம் தவிர்த்தல், 7. பெரியோரைப் போற்றுதல், 8. தூய்மை, 9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 10. நேர்மை என்றபடி. இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கும் இன்றியமையாததாக இருப்பது கவனிக்கத் தக்கது.

1.12 எனவே, ஆலயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், நீறு இல்லா நெற்றி பாழ்; சிவாலயம் இல்லா ஊர் பாழ்; சிவபூஜை இல்லா ஜன்மம் பாழ்; சிவனை அடையா வித்யை பாழ் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன

Sunday, January 10, 2016

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!

1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை
2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா
3. சிதம்பரம் கொத்சு
4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்
5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை
6. கும்பகோணம் பூரி-பாஸந்தி
7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்
8. மன்னார்குடி அல்வா
9. கூத்தாநல்லூர் தம்ரூட்
10. நீடாமங்கலம் பால்திரட்டு
11. திருவையாறு அசோகா
12. கும்பகோணம் டிகிரி காபி
13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா
14. கோவில்பட்டி கடலை மிட்டாய்
15. ஆம்பூர் தம் பிரியாணி
16. நாகர்கோவில் அடை அவியல்
17. சாத்தூர் சீவல்
18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்
21. மணப்பாறை அரிசி முறுக்கு
22. கீழக்கரை ரொதல்அல்வா
23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி
24. பண்ருட்டி முந்திரி சாம்பார்
25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்
26. சாயல்குடி கருப்பட்டி காபி
27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா
28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்
29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி
30. #புதுக்கோட்டை_முட்டை_மாஸ்
31. தூத்துக்குடி மக்ரூன்
32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி
33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு
34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்
35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்
36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று 
சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும்.
அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..
1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நாட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை
உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்..
கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.
"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்.