"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Thursday, February 27, 2014
Tuesday, February 25, 2014
நிர்வாகம் சிறந்திட !! 10 வெற்றிச் சூத்திரங்கள்
நிர்வாகம் சிறந்திட !!
1. இரண்டாவது இடத்தில் யார் என்பதைத் தீர்மானியுங்கள்
2. தொழில் நுட்ப வளர்ச்சிகளை உணர்ந்து பின்பற்றுங்கள்
3. ஒரு ரூபாய் சம்பாதிப்பதைவிட ஒரு ரூபாய் சேமிப்பது எளிது
4. ஒவ்வொரு தொழிலுக்கென்றும் சில வெற்றிச் சூத்திரங்கள் உண்டு.
5. உங்கள் அனுபவங்கள் மட்டுமல்ல…. மற்றவர்களின் அனுபவங்களும் பாடங்கள்தான்!
6. உள்ளுணர்வின் தூண்டுதலை உணர்ந்து செயல்படுங்கள்
7. செய்யும் விதமும் முக்கியம். செய்து முடிப்பதும் முக்கியம்.
8. உங்கள் தொழிலாளர்களுக்கு தொழில் பயிற்சியுடன் மேம்பாட்டுப் பயிற்சியும் கொடுங்கள்
9. மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வளருங்கள்.
10. நிறுவனத்தின் வெற்றி தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.
Yours Happily
Jc.Dr.Star Anand
Happy Selling Trainer & Motivator
www.v4all.org
Cell- 9790044225
Coimbatore

Sunday, February 16, 2014
உங்களை விற்க உங்களுக்கு தெரிந்திருக்கிறதா?

இந்தக்கேள்வி நகைப்புக்குரியதோ, அல்லது ஆச்சரியமானதோ அல்ல!
இங்கே குறிப்பிடப்பட்டது உங்கள் திறமைகளை!!
ஊழியர்களின் உழைப்பை குறைந்த விலையில் சுரண்டும் போக்கு, பெட்டிக்கடையில் இருந்து நாசாவரை இருக்;கின்றது.
பெரும்பாலானவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை மூலதனமாகவே கொண்டு அடிமாட்டு விலைக்கே ஆள்பிடிக்க முற்படுகின்றனர். ஒரு வேலையை செய்யவேண்டிய நேரத்தில் நான்கு வேலைகளை செய்துமுடிக்க வற்புறுத்துகின்றனர்.
உங்களுடைய கல்விக்கு தகுந்த வேலை, திறமைக்கேற்ற ஊதியம், இவற்றில் மிக உறுதியாக இருங்கள்.
உங்கள் திறமையை மேலும் அதிகரித்துக்கொள்கின்ற வகையான வேலையை தெரிவு செய்துகொள்ளுங்கள். நீங்கள் தொழில்புரியச்செல்லும் இடத்தில் உங்கள் நிர்வாகி எப்படி என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொள்ளுங்கள்.
நிர்வாகியாக உங்களைவிடத் திறமை அற்றவர் உட்கார்ந்திருந்தால் உடனடியாக அந்தவேலையை விட்டுவிடுவதே உங்களுக்கு நல்லது.
ஏனெனில் அவரால் நீங்கள் டீ மோட்டிவேட் ஆகும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.
நல்ல வேலைத்திறன் இருந்தும், மூளைத்திறன் இருந்தும் சிலர் முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் தங்களை அவர்கள் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டுள்ளதுதான்.
உங்கள் விலை என்ன? உங்களை எப்படி விற்பது என்பது உங்களுக்குத் தெரியாதுவிட்டால் வெற்றிக்கும் உங்களுக்குமான இடைவெளியும் கூடிக்கொண்டேதான் இருக்கும். இடை வெளிகளை நிரப்ப உதவுவது மதிப்பீடுகள் தானே?
Yours Happily
Jc.Dr.Star Anand
Vivekas Corpoarte Training Company
Coimbatore - 9790044225

யார் நம் தலைவன்? How to Select LEADER
யார் நம் தலைவன்?
இளமைக் காலத்தேடல்களில் ஒன்று தலைமைக்கான தேடல்!
தன்னை வழிநடத்த இன்னும் ஒருவர் வேண்டும் என்று எண்ணும் பருவம்.
இது திரை உலக நடிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள்வரை பலராலும் ஈர்க்கப்படும் காலம் இது.
தலைவர்களைத்தேடுவதும், அவர்களின் பாதைகளை பின்பற்றுவதும் தவறில்லை. ஆனால் தான் பின்பற்றும் தலைவர் தரமானவர்தானா? என்பதை ஆராய்ந்து பார்க்கும் அவசியம் அனைவருக்கும் வேண்டும்.
தன்னலமறுப்பு, பொதுவாழ்வில் பிடிப்பு, வந்துசேரும் தொண்டர்களுக்குரிய வழியை உணர்த்தும் முனைப்பு, இலக்கு நோக்கிய கவனக்குவிப்பு, இத்தனை தகுதிகளையும் சேர்ந்த தலைவரை தேர்ந்துகொள்ளும் போதுதான் சாதனைகள் சாத்தியமாகும்.
உணர்ச்சிகளைத்தூண்டிவிடும் உரைவீச்சு அல்ல தலைமையின் அடையாளம், வளர்ச்சிகளை நோக்கி வழிநடத்தும் விரிந்த பார்வையே மிக முக்கியம்.
சில அமைப்புக்களில் இணையும்போது, ஒன்றில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்
அந்த அமைப்பிற்கு தனிமனிதர் தலைமைதாங்குகின்றாரா? கொள்கைகள் தலைமைதாங்குகின்றனவா? என்பதை தெரிந்துணர்வதே மிக அவசியம்.
கொள்கைகளை முன் நிறுத்திய அமைப்புகளின் தலைமையில் தொடங்கி, கடைத்தொண்டன்வரை கொள்கையின் வீச்சு விரியும்.
தனிமனதனை மையப்படுத்திய அமைப்புகளில் கீழ்த்தரப்பில் இருந்து ஒவ்வொருவர் கவனமும் தலைவனை நோக்கியே குவியும். இன்று தன்னிகரற்ற கொள்கைகளுடன் தொடங்கப்பட்ட பல அமைப்புகள்கூட தனி மனித ஈர்ப்புக்கும் தன்னலத்தலைமைக்கும் தாரைவார்க்கப்பட்டுவிட்டன.
எனவே இந்த தலைiமுறைக்கு தலைமை அவசியமா? என்ற கேள்விகூட எழுந்துவிட்டது. தனி மனிதர் ஒவ்வொருவருக்கும் தன்னைத்தகுதிப் படுத்திக்கொள்ளத்தக்க கல்விச்சூழலோ சமூகச்சூழலோ இல்லை என்பதால் தலைமைக்கான தேடல் தொடர்கின்றது.
ஆனால் தலைமைக்கான தரம் எத்தனை தலைவர்களிடம் இருக்கின்றது? என்பதை எண்ணும்போதோ ஏமாற்றம்தான் மிச்சம்.
ஊடகங்களின் அசுர வளர்ச்சிகாரணமாக பல தலைவர்களின் முகத்திரைகள் கிழிகின்றன. சரித்திர புருஸர்களாய் வர்ணிக்கப்பட்டவர்கள் சராசரிகளை விடவும் சாதாரணமாக போயுள்ளனர்.
கொள்கையைக்காட்டிலும், இலச்சியங்களை ஆற்றிலும் விட்டுவிட்டு நேற்றைய பொழுதுகளின் பழைய கதைகளை நீளமாண்பபேசியே நிறைய தலைவர்களின் காலம் கழிந்துபோகின்றது.
எனவே தலைமைக்கான இலக்கணமாகவும், இலக்கியமாகவும் எழுகினற வாய்ப்பு இளைஞர்களிடமே இப்போது இருக்கின்றது.
நல்ல தலைமை இல்லை என்பதே இன்றைய தலைமுறையின் பெரிய பலவீனம்!
இன்னொரு விதத்தில்பார்ததால் இந்த தலைமுறையின் பலமும் அதுதான்.
உண்மையின் உந்துசக்தியை உழைப்பின் வெளிச்த்ததை விரிந்த பார்வையும், வலிமையை துணையாகக்கொண்டு புதிய இளைய தலைவர்கள் புறப்படக்கூடிய, புறப்படவேண்டிய காலமும் இதுதான்.
கவிழ்ந்த இருளைக்கிழித்து கதிர்முளைத்து எழுவதுபோல தவறான வழிகேட்டு தங்கள் தலைமுறை விழுந்துகிடக்கும்வேளையில் மீண்டெழுந்து சாதிக்கும் ஆற்றலும் சாதனை வேட்கையுமாய் இளைஞர்கள் எழுற்சி பெற இதுவே நேரம்.
தலைமை பண்பை வளர்க்கும் வெற்றிக்கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு செயல்சார் அணுகுமுறையோடு வருகின்ற தலைமைக்காக வரலாறு காத்திருகின்றது.
அப்படி ஒரு தலைவராய் ஆகும் தகுதி யாருக்கு இருந்தாலும் அவர்களை இதே ஊடகங்கள் உயர்த்தி நிற்கும்.
நீ வழிநடக்க வந்தவனா? வழிநடத்த வந்தவனா? கேள்விக்கான விடையினை உனக்குள் இருந்து கண்டெடுத்து வந்துவிடு.
உன்னுடைய பலங்களில் உன்னை நீ வென்றுவிடு.
தலைமை, பணம் சேர்பின் உத்தியல்ல பணி வாய்ப்பின் உத்தரவு என்னும் பணிவுள்ளம் கொண்டவர்களே நிலையான புகழோடு காலத்தால் நின்றிருகின்றார்கள்.
அத்தகைய தலைவர்களை அங்குமிங்கும் தேடாமல் உன்னிடமிருந்தே உருவாக்கு...
Yours Happily
Jc.Dr.Star Anand
Vivekas Corporate Training Company
Coimbatore
Cell -9790044225

Subscribe to:
Posts (Atom)