Wednesday, August 31, 2016

சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*

*சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*

தெரிஞ்சிக்கிறது ரொம்ப சிம்பிள்! இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள் உண்மைதானா என்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம் நீக்கமற நிறைத்திருக்கும்.

இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழியுள்ளதாமே.. எப்படி தெரியுமா,
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிராணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..
இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க.. பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன்.

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

சாஸ்திரம்தான் பொய்யானால் கிராணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிப்பதை பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.

கோல்டன் ஹவர்

கோல்டன் ஹவர்

“கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாமே… 10 நிமிஷத்துக்கு முன்னாடி கூட்டிட்டு வந்திருந்தா, உயிரைக் காப்பாத்தியிருக்கலாம்” என்று ஆபத்தான நிலையில் டாக்டர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்னைகளுக்கு,  ‘பொன்னான நேரம்’ (Golden hour) என்று ஒன்று உள்ளது. இந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான சிகிச்சை கிடைக்கச் செய்துவிட்டால், உயிரிழப்பைத் தவிர்க்க முடியும் என்கிறது மருத்துவ உலகம்.

 இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வந்து பிழைத்தவர்களும் உண்டு. இரண்டு நிமிடத் தாமதத்தால் இறந்தவர்களும் உண்டு. ஒரு உயிரைக் காப்பாற்றும் இந்த ஒவ்வொரு மணித் துளியின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பொன்னான நேரத்தில் உயிருக்குப் போராடும் ஒருவரை எப்படிக் காப்பாற்றுவது? அவர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி, சிகிச்சைகள் என்னென்ன?

சாலை விபத்து
***********************
கோல்டன் ஹவர்: ஒரு மணி நேரத்துக்குள்

யாருக்கு அதிகமாக அடிபட்டு உள்ளதோ, அவரை முதலில் ஆம்புலன்ஸில் ஏற்ற உதவ வேண்டும். அடிபட்டவரைச் சுற்றிலும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பதால், மூச்சுவிட அதிக சிரமப்பட்டு, உடல்நிலை மேலும் பாதிக்கும்.

அதிகப்படியான ரத்தப்போக்கின்போது ஒரு சுத்தமான பருத்தித்துணியால் (துப்பட்டா, கைக்குட்டை, துண்டு) கட்டுப்போட்டால் ரத்தம் வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். இதற்குப் பெயர் ‘ப்ரீ ஹாஸ்பிடல் டிராமா கேர்’ (Pre Hospital trauma care). இதனால், உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அடிபட்டவரை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

விபத்தில் முதுகு அல்லது கழுத்தில் காயம்
***************************************************************
கோல்டன் ஹவர்: ஒரு மணி நேரத்துக்குள்

விபத்தில் சிக்கியவருக்குக் கழுத்து, முதுகில் காயம் ஏற்பட்டிருந்தால் அல்லது அந்தப் பகுதியில் வலிக்கிறது என்றால், இன்னும் சற்று கவனத்துடன் அவர்களைக் கையாள வேண்டும். தலை தொங்குவது போல தூக்கக் கூடாது. தலையும் உடலும் நேர்க்கோட்டில் இருப்பது போல தூக்கிவைக்க வேண்டும். கவனம் இன்றித் தூக்கும்போது, உடைந்த முதுகெலும்போ கழுத்து எலும்போ மேலும் சேதமாகி, கோமா நிலைக்குப் போகலாம். முதுகு, கழுத்து எலும்பில் அடிபட்டவர்களை நேராகத் தூக்கிவைக்க ஸ்ட்ரெச்சரோ பலகையோ இல்லை என்றால், ஆம்புலன்ஸ் வரும் வரை தூக்காமல் இருப்பதே பேருதவி.

அடிபட்டவருக்கு ஜூஸ், பால், உணவுகளைக் கொடுக்கக் கூடாது. இதனால், வாந்தி வரக்கூடும். தலையில் அடிபட்டு இருந்தால், பெரும் சிக்கல் ஆகிவிடும். சிறிது தண்ணீர் வேண்டுமெனில் கொடுக்கலாம்.

அடிபட்ட, முதல் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய, முறையான முதலுதவியால் உயிர் பிழைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

பக்கவாதம்
******************
கோல்டன் ஹவர்: மூன்று மணி நேரத்துக்குள்

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் ரத்தக்கசிவு காரணமாகப் பக்கவாதம் வரும். தலைசுற்றல், இரண்டு நிமிடங்களுக்கு சுயநினைவு இழந்துபோதல், கை, கால் இழுத்தல், வாய் ஒருபக்கம் இழுத்தல், பேச்சுக்குழறல் என்று சொன்னால், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இதற்கு மூளை நரம்புகளில் ஏற்பட்ட அடைப்பைக் கரைப்பதற்கான மருந்தை மூன்று முதல் நான்கரை மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும். எனவே, பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள மருத்துவமனையை அணுகினால், பக்கவாதப் பாதிப்பில் இருந்து முற்றிலும் நீங்கலாம்.

8 முதல் 12 மணி நேரத்துக்குள் வந்தால், உயிரிழப்பைத் தவிர்க்கலாம். ஆனால், அதற்குள் மூளையில் உள்ள நியூரான்கள் அதிக அளவில் உயிரிழந்திருக்கும். இதனால், உடலின் சில செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

12 மணி நேரத்துக்குப் பிறகு உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. அப்படியே உயிரைக் காப்பாற்றினாலும், கை, கால் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியாது.

குடல்வால் வெடிப்பு – வயிற்றுவலி
*****************************************************
கோல்டன் ஹவர்: 4-6 மணி நேரத்துக்குள்

வயிற்றுவலிக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. சிறுநீரகக் கல் அடைப்பால் ஏற்படும் வலி, குடல்வால் வீக்கம் (Appendicitis), குடல் முறுக்கு, அடைப்பு போன்ற தீவிரமான வலி எனில், 4-6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

குடல்வால் பிரச்னை என்றால் வாந்தி, தீவிர வயிற்று வலி இருக்கும். இதற்கு, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை அல்லது மாத்திரை, மருந்துகளால் சரிப்படுத்த முடியும். மிகவும் தீவிர நிலையில் இருக்கிறது என்றால், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குடல்வால் வெடித்துவிட்டது என்றால், நோய்த்தொற்று குடல் முழுவதும் பரவிவிடும். இந்த நிலையில், குடல் வாலை அகற்றுவதுடன், நோய்த்தொற்றை நீக்க, குடல் பகுதியை முற்றிலும் சுத்தம் செய்ய வேண்டும்.  காலராவால் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறிவிடும். இதனுடன், தாதுஉப்பும் வெளியேறிவிடும். குழந்தைகளைப் பாதிக்கும்போது, உயிரிழப்பு வாய்ப்பு அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எலெக்ட்ரோலைட் அல்லது உப்பு சர்க்கரை நீர்க் கரைசலைக் கொடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே, உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

பாம்புக் கடி 
*****************
கோல்டன் ஹவர்:  (3 மணி நேரத்துக்குள்)

சினிமாவில் காட்டுவது போல, பல்லால் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவது, கத்தியால் வெட்டுவது என வித்தைகள் எதுவும் செய்யக் கூடாது. குழாய் நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். கடித்த இடத்தை அதிக அசைவுகள் கொடுக்காமல் இருந்தாலே போதும். பாம்பு கடித்த, மூன்று மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது நல்லது. மருத்துவர் ஆன்டிவெனோம் மருந்தைக் கொடுத்தால், விஷம் முறிந்துவிடும். மருத்துவமனைக்கு வராமல் தாமதித்தால், சிறுநீரகச் செயலிழப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். ஆனால், இவற்றுக்கும் சிகிச்சைகள் உண்டு.

தீக்காயம்
***************
கோல்டன் ஹவர்: (உடனடி – 1 மணி நேரத்துக்குள்)

பால், சுடுதண்ணீர், கஞ்சி போன்றவை மேலே ஊற்றிக்கொண்டால், உடனே குழாய் நீரைக் காயத்தின் மேல் விட்டு, ஈரமான பருத்தித் துணி, வாழை இலையால் போர்த்தி, மருத்துவமனைக்கு உடனே கொண்டுசெல்லவும். பஞ்சு, சாக்குப் பை, சிந்தடிக் துணி ஆகியவற்றால் துடைக்கவோ, போர்த்தவோ கூடாது. நூல் நூலாகப் பிரிந்த துணியைக் காயத்தின் மேல் போர்த்தக் கூடாது. இது, காயத்தை மேலும் பாதிக்கும்.

குழந்தைகள் பொருட்களை விழுங்கிவிட்டால்                                   *******
குழந்தைகள் விளையாட்டாகச் செய்யும் சில காரியங்கள் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். கையில் கிடைக்கும் காசு, சிறிய விளையாட்டுப் பொருட்கள், பட்டாணி, வேர்க்கடலை போன்றவற்றை விழுங்கும்போது, அது மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம்.  இதை, உடனடியாகச் சரிசெய்யாவிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  தண்ணீர், உணவு கொடுக்கவே கூடாது.

தற்கொலைக்கு முயன்றவர்கள் (உடனடி)

பூச்சிக்கொல்லி, எலி மருந்து, வயலுக்கு அடிக்கும் மருந்தைக் குடித்துவிட்டால், உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். மயங்கிய நிலையில் இருப்பவருக்கு, சோப்பு கரைசல், உப்புக் கரைசல் கொடுக்கக் கூடாது. இதனால், புறை ஏறி, நுரையீரல் பாதித்து உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகிவிடலாம்.

மாரடைப்பு, நெஞ்சு வலி
                        *****
கோல்டன் ஹவர்: 1 மணி நேரம்

இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்பு. ரத்தக்குழாயில், ரத்தம் உறையும்போதும், கொழுப்பு அடைத்துக்கொள்ளும்போதும், இதயத்தசைகள் பாதிக்கப்படும். செல்கள் உயிர்வாழ ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் தேவை. இதை, ரத்தம் மூலம்தான் உடல் பெறுகிறது. இதயத்திசுக்களுக்கு ரத்தம் கிடைக்காமல் போகும்போது, அது உயிரிழக்க ஆரம்பிக்கிறது. எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அந்த அளவுக்கு இதயத்திசுக்களின் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.

 40 வயது கடந்த ஆண்கள், 45 வயது கடந்த பெண்கள் அவர்கள் வாழ்நாளில் சந்திக்காத வலி இடது கை, இடது பக்கத்தில் ஏற்படும், மயக்கம் வரும். இதுவே மாரடைப்பு.

மாரடைப்பில் தீவிரமானது மேசிவ் அட்டாக் (Massive attack), 50 சதவிகித இதயத் தசைகள் வேலை செய்யாமல் போக, இதயம் திணறும். அப்போது அவர்களுக்கு மூச்சு வாங்கும். அவர்களால் படுக்க முடியாது. ஆதலால், படுக்கக் கட்டாயப்படுத்தாமல் அவர்களைச் சாயவைத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

சளி, மூச்சுத் திணறல் இருப்பவர்களைப் படுக்கவைக்காமல், தலையணை வைத்து அதில் சாய்த்தது போல கொண்டு செல்லலாம். படுத்தால், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள், ஆஸ்பிரின் மாத்திரையைத் தண்ணீரில் கலந்து உடனே குடித்துவிட வேண்டும். மாரடைப்பு நோயாளியை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சீக்கிரம் சிகிச்சை எடுத்துக்கொண்டால், இதயம் பாதுகாக்கப்படும், தசைகள் அழிவது மற்றும் மாரடைப்பு திரும்ப வருவது தடுக்கப்படும்.

கவனிக்க: சர்க்கரை நோயாளிகளுக்கு பல நேரங்களில் மாரடைப்பின் அறிகுறிகள் வெளிப்படாமலேகூட இருக்கும். லேசாக நெஞ்சுவலி வந்தாலே, இவர்கள் மருத்துவமனையை அணுக வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மனச்சோர்வு, மனஅழுத்தம், உடலுழைப்பு இல்லாதவர்கள், முதியவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், 40 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆகியோர் வீட்டில் கட்டாயம் ‘ஆஸ்பிரின் மாத்திரை’ வைத்துக்கொள்ள வேண்டும்.

108 நம்பர், அருகில் உள்ள மருத்துவமனையின் அவசர எண் நம்பரை பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும்.

சடன் கார்டியாக் அரெஸ்ட்
***************************************
சீராகத் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரென்று, துடிப்பை நிறுத்திக்கொள்ளும். இதற்கு, சடன் கார்டியாக் அரெஸ்ட் (திடீர் இதயத்துடிப்பு முடக்கம்) என்று பெயர். பலரும் இதை மாரடைப்பு எனத் தவறாகக் கருதுகின்றனர்.

இதயத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்து இதயம் இயங்காமல் நிற்பது, இதயத்துடிப்பு குறைந்து அப்படியே நின்றுவிடுவது, மாரடைப்பு வருவதால், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படுவது, சிறுநீரகச் செயலிழப்பு எனப் பல்வேறு காரணங்களால் சடர்ன் கார்டியாக் அரெஸ்ட் வரலாம்.

சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து 4-10 நிமிடங்களுக்கு, எந்த ஓர் உறுப்புக்கும் ரத்த ஓட்டம் செல்லவில்லை எனில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும். உடனடியாக, அவசர உதவிக்கு அழைத்துவிட்டு, சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். இதயத்துக்குத் துடிப்பு கொடுக்கும் முதலுதவி செய்ய நெஞ்சுப் பகுதியில் மசாஜ், மூச்சுக்குழாயில் ஆக்சிஜன் கொடுத்துக் காப்பாற்றலாம். மீண்டும் இதயம் துடிக்கவில்லை எனில், நிமிடத்துக்கு 100- 120 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். அவருக்கு டேஃபிபிரிலேட்டர் (Defibrillator) சிகிச்சை அளிக்க வேண்டும்.

பைரவர் வழிபாடு - கட்டுக்கதைகளும் உண்மைகளும் :

பைரவர் வழிபாடு - கட்டுக்கதைகளும் உண்மைகளும்   :

வழிபாடு என்பது மிகப் பழமையானதும், மிகவும் ரகசியமாகவும் வைக்கப்பட்டதுமான ஒரு அரிய முறை ஆகும். ஆனால் அன்னியர்களின் படையெடுப்பினால் இந்த அரிய முறைகள் பின்பற்றப்படாமல் மறைக்கப்பட்டன. தற்போது பைரவர் வழிபாடு மீண்டும் தழைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நவீன காலத்தில் இணையத்தில் பைரவ வழிபாட்டிற்கு ஆதரவாகவும், பைரவர் வழிபாட்டிற்கு எதிராகவும் வலைப்பூக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உண்மையை சொல்லப்போனால் பைரவ வழிபாட்டிற்கு எதிராக ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது.

பைரவ வழிபாடு பற்றிய கட்டுக்கதைகளையும், உண்மைகளையும் இப்பதிவில் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் இவற்றை காண்போம்.

கட்டுக்கதை – 1:

பைரவரை வணங்கினால் வீட்டின் தலைமகனை காவு வாங்கி விடுவார்.

உண்மை:

பைரவர் அசூரர்களை அழிக்க அவதாரம் செய்த சிவனின் வடிவம். அவர் தம்மை வணங்குபவர்களையும் அவரது பரம்பரையையும் காத்து நிற்கும் உன்னதமான சிவ வடிவம். மனிதர்களை அழிக்க அவதாரம் செய்யவில்லை. மனிதர்களை காக்கும் கடவுளே பைரவர் ஆவார்.

கட்டுக்கதை – 2:

பைரவரை வீட்டில் வழிபாடு செய்யக்கூடாது.

உண்மை:

பொதுவாக பைரவ வடிவங்களில் வீட்டில் வைத்து வழிபட தக்கவர் தன் மடியில் சொர்ணதாதேவியை அணைத்தவாறு உள்ள சொர்ணபைரவர் ஆவார். மற்ற பைரவர்களை வழிபாடு செய்யும் இடங்களும், காலங்களும் வெவ்வேறானவை. மற்ற பைரவர்களை ஆலயங்களில் வழிபாடு செய்வதே சிறப்பானது.

கட்டுக்கதை – 3:

பைரவரை சந்நியாசிகள் தான் வழிபாடு செய்ய வேண்டும்.

உண்மை:

எல்லா பைரவர்களையும் எல்லோரும் வழிபாடு செய்யலாம். எல்லா பைரவர்களுக்கும் சக்தியர் உள்ளனர். அவர்கள் யோகினிகள் எனப்படுவர். பைரவர்கள் சிவசக்தி வடிவமாக உள்ளனர். சிவசக்தி வடிவங்களை யார் வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம். பைரவர்களின் வழிபாட்டு முறைகளை குருமுகமாக தெரிந்து கொண்டு வழிபாடு செய்வதே சிறந்தது.

கட்டுக்கதை – 4:

பைரவருக்கு அசைவம் படைக்கலாம்.

உண்மை:

அசைவம் படைப்பது என்பது பெரும் பாவம் ஆகும். ஜீவகாருண்யமே சிவ வடிவங்களின் உண்மையான குணம் ஆகும். மாமிசம் என்பது பேரீச்சம்பழமே ஆகும். பேரீச்சம்பழத்தினை பைரவருக்கு படையலாக வைக்கலாம்.

கட்டுக்கதை – 5:

பைரவருக்கு மது படைக்கலாம்.

உண்மை:

மதுவினை படைத்தலும் பெரும் பாவமே ஆகும். உண்மையில் மது என்பது தேன் ஆகும். தேனை பைரவருக்கு படையலாக வைக்கலாம்.

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன?
ஊதுபத்தி ஏற்றுவது ஈஸ்வரனை மகிழ்ச்சிப்
படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள
பெரியவர்கள் கூறியிருக்க நாம்
கேட்டிருப்போம். அதனுள் மறைந்திருக்கும்
உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து
பார்க்கவேண்டும்.
ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன்,
அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம்
சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும். அது
புகைந்து சாம்பலானாலும், தன்னைச்
சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால்
மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக
மனப்பான்மையின் வெளிப்பாடு. ஓர்
உண்மையான இறைத் தொண்டன்,
தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம்
விட்டொழிக்கவேண்டும். பிறருக்காக
நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக்
கொள்ளவேண்டும். மற்றவர்களின்
வாழ்க்கையும் மணம்வீச வழி செய்வதே
தெய்வீக செயலாகும்.
ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும், அதன்
மணம் மட்டும் காற்றில் கலந்துவிடுகின்ற
து. அதன் மணத்தை முகர்ந்தவர், அதை தம்
நினைவிலே வைத்திருப்பர்.
அதுபோலத்தான், மற்றவர்களுக்காக நன்மை
செய்துவிட்டு வாழ்ந்து மறைந்தவர்களின்
பேரும்புகழும் என்றுமே மக்களிடையே
நிலைத்திருக்கும்.
நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மைத்
தரும் நல்ல விஷயங்களைக் கூறுவதும்,
நல்ல விஷயங்களை அவர்களுக்கு
செய்தலும், அவர்கள் எப்போதும் நல்வாழ்வு
பெறவேண்டும் என மனதார நினைப்பதும்
மிகப் பெரிய உன்னதமான செயலாகும்.
இதுபோன்ற குணத்தை தான் ஊதுபத்தி
குறிக்கின்றது. இதுபோன்ற குணத்தை
உடையவர்கள் தான் ஈஸ்வரனுக்கு
மகிழ்ச்சியைத் தருபவர்கள். இதை தான் நம்
பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.
”அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்” (குறள் 96)
--- மற்றவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல
விஷயங்களைச் சொல்வதால் ஒருவருடைய
தீவினைகள் தேய்ந்து, நல்வினைகள்
பெருகும்.

புகழ்பெற்ற 18 சித்தர்கள் கோவில்கள்...!!! .

புகழ்பெற்ற 18 சித்தர்கள் கோவில்கள்...!!!

. நமது கோரிக்கைகளை கடவுளை அடைய  ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

 
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி,  தெய்வீக செயல்களையும், நினைத்த  காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.
 
அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
 
உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
 
அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.   
 
இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:- 
 
அகஸ்தியர் - திருவனந்தபுரம் 
 
கொங்கணர் - திருப்பதி 
 
சுந்தரனார் - மதுரை 
 
கரூவூரார் - கரூர் 
 
திருமூலர் - சிதம்பரம் 
 
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் 
 
கோரக்கர் - பொய்யூர் 
 
குதம்பை சித்தர் - மாயவரம் 
 
இடைக்காடர் - திருவண்ணாமலை 
 
இராமதேவர் - அழகர்மலை 
 
கமலமுனி - திருவாரூர் 
 
சட்டமுனி - திருவரங்கம் 
 
வான்மீகர் - எட்டிக்குடி 
 
நந்திதேவர் - காசி 
 
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில் 
 
போகர் - பழனி 
 
மச்சமுனி - திருப்பரங்குன்றம் 
 
பதஞ்சலி - இராமேஸ்வரம்
 
இவைகள் போலவே, தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள கோவில்களில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளதை அறியலாம். 
 
ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கினால், நமக்கு உள்ள எல்லா தோஷங்களும் விலகி ஓடும். தீய சக்திகள் நம்மை நெருங்காது. மனம் அமைதி பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்வில் வெற்றி நம்மைத் தேடிவரும்.
 
எனவே, ஜீவசமாதிகள் பெரும்பாலும், மூலவருக்கு அருகிலேயே தனிச்சன்னதி கொண்டு இருக்கும். அங்கு சென்று, மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், நமது எல்லா செயல்களும் வெற்றி பெறுவது நிச்சயம்.

புகழ்பெற்ற 18 சித்தர்கள் கோவில்கள்...!!! .

புகழ்பெற்ற 18 சித்தர்கள் கோவில்கள்...!!!

. நமது கோரிக்கைகளை கடவுளை அடைய  ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

 
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி,  தெய்வீக செயல்களையும், நினைத்த  காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.
 
அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
 
உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
 
அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.   
 
இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:- 
 
அகஸ்தியர் - திருவனந்தபுரம் 
 
கொங்கணர் - திருப்பதி 
 
சுந்தரனார் - மதுரை 
 
கரூவூரார் - கரூர் 
 
திருமூலர் - சிதம்பரம் 
 
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் 
 
கோரக்கர் - பொய்யூர் 
 
குதம்பை சித்தர் - மாயவரம் 
 
இடைக்காடர் - திருவண்ணாமலை 
 
இராமதேவர் - அழகர்மலை 
 
கமலமுனி - திருவாரூர் 
 
சட்டமுனி - திருவரங்கம் 
 
வான்மீகர் - எட்டிக்குடி 
 
நந்திதேவர் - காசி 
 
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில் 
 
போகர் - பழனி 
 
மச்சமுனி - திருப்பரங்குன்றம் 
 
பதஞ்சலி - இராமேஸ்வரம்
 
இவைகள் போலவே, தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள கோவில்களில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளதை அறியலாம். 
 
ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கினால், நமக்கு உள்ள எல்லா தோஷங்களும் விலகி ஓடும். தீய சக்திகள் நம்மை நெருங்காது. மனம் அமைதி பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்வில் வெற்றி நம்மைத் தேடிவரும்.
 
எனவே, ஜீவசமாதிகள் பெரும்பாலும், மூலவருக்கு அருகிலேயே தனிச்சன்னதி கொண்டு இருக்கும். அங்கு சென்று, மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், நமது எல்லா செயல்களும் வெற்றி பெறுவது நிச்சயம்.

ஞானத்தை யாரிடம் கற்பது ?

ஞானத்தை யாரிடம் கற்பது ?

”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட  அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,

“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,

“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும், 

“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது. 

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.

“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை”  பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.

நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.

அனுமனுக்கு வெண்ணெய் சாற்றுவது ஏன் தெரியுமா*

*அனுமனுக்கு வெண்ணெய் சாற்றுவது ஏன் தெரியுமா* 

சொல்லின் செல்வன், இராமனின் பக்தன், சஞ்சீவி மலையை தூக்கியவன், பஞ்ச புதங்களை வென்றவன் என்ற பல பெயர்களை கொண்ட அனுமனுக்கு வெண்ணெய் சாற்றுவது ஏன் தெரியுமா.

ராவண வதத்திற்குப் பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களை வதம் செய்யக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமனே அதற்கு தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவரவருக்கு உரிய ஆயுதங்களை ஆசீர்வாதம் செய்து அளித்தார்கள்.

ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னபிற கடவுள்களும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் அளித்தார்கள். ஸ்ரீராமர், தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெயை அளித்து இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடுவாய் என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

அதன்படி அனுமன் வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் அழித்துவிட்டார். அதுபோல நாம் வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும்.

மருவிய தமிழர்நாட்டின் ஊர்ப்பெயர்கள்:

மருவிய தமிழர்நாட்டின் ஊர்ப்பெயர்கள்:
**********************************
தன்செய்யூர் - தஞ்சாவூர்

பொழில் ஆட்சி - பொள்ளாட்சி

வெண்கல்லூர் - பெங்களூர்

செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு

ஒத்தைக்கல் மாந்தை- உதகமண்டலம்

ஒகேனக்கல் - உகுநீர்க்கல்

குன்னூர் - குன்றூர்

எருமையூர் - மைசூர் (எருமை என்பது வடமொழியில் மகிசம். எனவே மகிசூர் என்று மாற்றி, பின் அது மைசூர் என்றானது)

ஆத்தி மரம் நிறைந்த பகுதி - ஆர்க்காடு (ஆர் என்பது ஆத்தி மரம்)

ஏரியை ஒட்டிய காடு அமைந்திருந்த பகுதி - ஏரிக்காடு - ஏர்க்காடு - ஏற்காடு ஆயிற்று.

மதுரை - மதிரை (மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு மக்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதனால், தங்கள் தலைநகரத்தை மதுரை என்று பெயரிட்டனர்)

பாண்டி பசார் - சவுந்தரபாண்டியனார் அங்காடி.
(அய்யா சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).

சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்ட சில தமிழர் ஊர்ப்பெயர்கள்:
***************************************************

விருதாச்சலம் - முதுகுன்றம்

வேதாரண்யம் - திருமறைக்காடு

திண்டிவனம் - புளியங்காடு

மாயவரம் - மயிலாடுதுறை

யானையின் எடை எவ்வளவு..?

யானையின் எடை எவ்வளவு..?

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.
''யானையின் எடையை எப்படி அறிவது?'' என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ''நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்'' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.
அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.
எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.
எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

- வெ. இறையன்பு