Sunday, May 15, 2016

இந்து" சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்:

"இந்து" சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்:

1. நாட்கால் நடல்:

இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.

பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும்
மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி
நடவேண்டும்.

மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.

பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி
நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு
போட்டு பந்த கால் நட வேண்டும்.

சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்கவேண்டும்.

பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால்
ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி
தடவ வேண்டும்.

மாவிலை, நவதானியம், வெள்ளி நாணயம், பூ, தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி
பெறுவது நோக்கமாகும்.

2. பொன்னுருக்குதல்:

திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம்
ஆகும்,போற்றி பாதுகாக்க படவேண்டியது ஆகும்.

நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக
வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து
உரிய நபரிடம் (பொற்கொல்லர்) புதிய பொன்
கொடுத்து திருமாங்கல்யம் செய்யவேண்டும்.

3. கலப்பரப்பு:

மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை
களத்தில் பரப்பி (தரையில் விரித்து)
மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை
இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம்
இருவீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான
அடையாள நிகழ்ச்சி (கலம் என்பது பாத்திரம்)
ஆகும்.

பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, தெங்காய், பழக்கள் பூச்சரம்) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும்.

4. காப்பு கட்டுதல்:

காப்பு என்பது அரண் போன்றது.

மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு
வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது.

திருஸ்டி மற்றும் அசுர சக்திகளால்
இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு .

காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு
அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான
அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி
செய்வேன் என்பதை உறுதி செய்யும்
சடங்காகும்.

அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.

5. முளைப்பாலிகை:

நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை
சாந்தி செய்வது .

முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும்
என்பதற்கான அடையாளச்சடங்கு .

கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம்
தெய்வீக பண்பின் உறைவிடம் .

எனவே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது.

6. தாரை வார்த்தல்:

தாரை என்றால் நீர் என பொருள் .

நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின்
அதிர்வை ஏற்கக்கூடியது .

இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு
பயன்படுத்துகின்றனர் .

திருமணச் சடங்குகளில் மிக முக்கியமானது தாரை
வார்த்தல்.

தாரை வார்த்தபின்பு தான் மணமகன் மணமகள்
கழுத்தில் தாலி கட்டும் உரிமையை
அடைகின்றான்” என் மகளை தெய்வங்களின்
சாட்சியாக உனக்கு மனைவியாக
கொடுக்கின்றேன் “என மணமகளின் பெற்றோர் ,
தாரை வார்த்து கொடுக்க மணமகனின்
பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு
– மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம்
என்பதற்கான உறுதிமொழி.

எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை
ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க,
அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை,
மணமகனின் கை , மணப்பெண்ணின் கை ,
மணப்பெண்ணின் தந்தையின் கை,
எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின்
தாயாரின் கை.

இந்தவெரிசையில் கைகளை வத்து இச்சடங்கு நடைபெறும்.

உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக
செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு
தாரை வார்த்தல் என்ப்படும்.

7. தாலி கட்டுவது:

தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில்
கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.

மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.

மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள
சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும்
ஆடவர், ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது,
கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள்
மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி
போய்விடுவார்.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை
கொண்டதாகும்.

ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.

தெய்வீக குணம், தூய்மையானகுணம்,
மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம்,
ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை
உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது
குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்க
வேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள
மாங்கல்ய நாண் பெண்களுக்கு
அணியபடுகிறது.

8. ஹோமம் வளர்த்தல்:

வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னிசாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும்.

ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும்.

ஹோமத்தில் இடப்படும் பொருட்கள்
சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது.

ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும்
ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான்
சாஸ்திரப்படி சரியாகும்.

9. கும்பம் வைத்தல்:

கும்பம் இறைவனது திரு உடம்பின்
அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத்
திகழ்வது கும்பம்.

இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும்
கும்பவஸ்திரம் உடம்பின் தோல்
நூல் நாட நரம்புகள்
குடம் தசை
தண்ணீர் இரத்தம்
நவரத்தனங்கள் எலும்பு
தேங்காய் தலை
மாவிலை தலைமயிர்
தருப்பை குடுமி
மந்திரம் உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .

10. அம்மி மிதித்தல்:

அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல்
செயவதற்கு பயன்படும், பொருட்களை
அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும்.

அம்மிங்மிக உறுதியுடனும், ஒரே இடத்தில்
அசையாமல் இருக்கும்.

திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும்
சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன்
எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை
கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே
அம்மி மிதிப்பது ஆகும்.

11. அருந்ததி பார்த்தல்:

அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான
வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார்.

ஏழு ரிஷிகளும், வானில் நட்சத்திரங்களாக ஒளி
வீசுகிறார்கள்.

இதைத்தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம்.

ஏழு நட்சத்திரங்களில், ஆறாவதாக (நட்சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார்.

இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.

இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம்
பார்த்தோம் என்றால், சப்த ரிஷி மண்டலத்தை
காணலாம்.

ஆறாவது நட்சத்திரமாக ஒளிவீசும்
வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால்
அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும்
பார்க்கலாம்.

மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா,
ஊர்வசி, மேனகை இவர்களிடம்
சபலபட்டவர்கள்.

அதேபோல் அவர்களுடைய
மனைவிகளும், இந்திரனனின் மேல்
சபலப்பட்டவர்கள்.

ஆனால் வசிஷ்டரும், மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.

12. ஏற்றி இறக்குதல்:

மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள்
மங்கலப் பொருட்களை (திருவிளக்கு, நிறை
நாழி, சந்தனக்கும்பா, பன்னீர்ச்செம்பு,
தேங்காய், பழம், குங்குமச்சிமிழ், மஞ்சள்
பிள்ளையார் போன்றவை) தொட்டுச் செய்யும்
சடங்கு .

மேலும் அருவ நிலையிலிருந்து
மணமக்களை ஆசிர்வதிக்கும்
தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் ,
முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான
பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக
செய்யப்படுவதும் உண்டு.

13. அடை பொரி:

பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும்
.பல உருவத்தைக் காட்டும் வகையில்
பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண
நகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி
தோஸங்களை நீக்க வல்லது .

இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.

14. நிறை நாழி:

நித்தமும் குத்து விளக்கு என்று
சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து
வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது
அய்தீகம் ஆகும்.

15. ஒலுசை:

ஒலுசை என்பதை வரதட்சணை என்றும்
கூறுவர்.

மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி .

சிறப்பான இல்லறவாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண்வீட்டார்
கொடுப்பது .

ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது . இது
வரவேற்க்க தக்க விசயமாகும்.

16. மணமகள் பொங்கலிடுதல்:

முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள்
அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த
இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் சூரியன்
முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்
நிகழ்ச்சி ஆகும்.

மணமகள் வீட்டுப் பொறுப்பை
ஏற்றுக் கொண்டாள் என்பதைக்
வெளிப்படுத்துவது.

புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது.

இதுதான் மணப்பெண்ணின்
முதல் சமையல்.

இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.

17. பிள்ளை மாற்றுவது:

எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம். இனியும்
நீங்கள் பச்சைக்குழந்தைகள் அல்ல என்பதை
மணமக்களுக்கு உணர்த்தும் செயல்வடிவ
உபதேசம்.

பிறக்கப்போகும் குழ்ந்தைகள் நல்ல
முறையில் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற
நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர
வாழ்த்துவது.

திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு

“மங்கலமென்ப மனைமாட்சிம்ற்று அத்ன் நஙலம்
நன்மக்கட்பேறு” – திருவள்ளுவரின்
வாக்காகும்.

நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு.

18. மறுவீடு:

மணமகளின் பெற்றோரும் – உறவினரும்
மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக
மணமகளுடன் சென்று – விருந்துண்ட்
மகிழ்ந்து – உறவை வலுப்படுத்துவது .

ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும்,
புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின்
இருபக்கங்கள் போன்றது .

மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச்செய்வதே மறுவீடு ஆகும்.

19. கோவிலுக்கு அழைத்துச்செல்லுதல்:

நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது
மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக
அமைந்திருக்கும் .

வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி
செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம்
பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு
தம்பதிகளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்ல
வேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வோரு சடங்குகளும் அர்த்தம் உடையவை.

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது !

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து
முளைத்துக் காட்டுகிறது !

ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது !

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன !

மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன !

ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !

சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன !

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !

இப்படி பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
உன்னால்
வாழ முடியாதோ ? ! ?

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய
வாழ்க்கை . . .

அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய்
வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுதுகொண்டு
வாழ்கின்றாய் !

சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !

இது உன் வாழ்க்கை...
ஆனந்தமாக வாழ் . . . காலை வணக்கம்...💐🎭

விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்க முடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

ஆர்வமுடன் அதை கேட்ட மன்னன், அவனுக்கு நன்றி கூறி அதை வாங்கி குடித்தான். ஒரு வாய் குடித்தவன் சற்று நிறுத்த அந்த இளைஞன் ஆர்வமுடன் அவரது ரீயாக்ஷனை கவனித்துக்கொண்டிருந்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தியதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு, ராணி அரசனை கோபித்துக்கொள்கிறாள்.

“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? நான் கேட்க கேட்க காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்தம் நீரையும் குடித்துவிட்டீர்களே…”

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”

அரசன் சொல்ல, அந்த தோல் பையை எடுத்து பார்க்கிறாள். ஆம்… அதில் இன்னும் கொஞ்சம் நீர் இருக்கிறது.

ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“இந்த தண்ணீரையா நீங்கள் உலகிலேயே சிறந்த நீர் என்று மெச்சிக்கொண்டீர்கள்? என்ன ஆயிற்று உங்களுக்கு??”

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது. அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம் வேதனைப்பட்டிருக்கும். அன்பைவிட சுவையானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நானே முழு நீரையும் குடித்தேன்” என்று விளக்கமளிக்கிறான்.

ராணி வெட்கி தலை குனிகிறாள்.

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல.  அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் வாழ்ந்தால் அதுவே பெரிய புண்ணியம்தான். மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள். யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.

இக்காலத்தில் சில குழந்தைகளின், 'ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது.

இக்காலத்தில் சில குழந்தைகளின், 'ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.
சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், அவர் சொன்னது:
சாதாரணமா தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத மொழியாகப் பார்த்து, ஒதுக்கி வைப்பாங்க. ஆனா, நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; இங்கே, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க.
சமீபத்தில், யூ.கே.ஜி., குழந்தைகளுக்கு, படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துட்டு இருந்தேன். அதில் ஒரு கதையில், ஆலமரத்தில் கூடுகட்டி, முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, 'ஸ்வாகா' செய்து வருவதையும், பாம்பை பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பை கொன்று, முத்து மாலையை, காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையில் இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்கு விளக்கினேன்.
தலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று, 'இது என்ன கதை மிஸ்?' என்றாள்.
'இது தான் நீதிக்கதை...' என்றேன்.
'இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?' எனக் கேட்டாள். 'தன்னைவிட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்ங்கிறது தான் நீதி...' என்றேன்.
'அதுக்காக காகம் என்ன செஞ்சது?' என்றாள்.
'ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டது...' என்றேன்.
உடனே, அக்குழந்தை, 'ஒருத்தருக்கு சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தா, அது திருட்டு தானே... அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க மிஸ்... திருடறது தப்பு இல்லயா?' எனக் கேட்டாள்.
குழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. 'திருதிரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தாள்...
'என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பை கொலை செய்றது தப்பில்லயா மிஸ்... பாம்பும் ஒரு உயிர் தானே...' என்றாள்.
நானும், 'தப்பு தான்!' என்றேன். உடனே, 'இந்தக் கதையில திருடுறதையும், கொலை செய்றதையும் தானே எங்களுக்கு சொல்லித் தந்திருக்கீங்க; இது நீதிக் கதையா?' எனக் கேட்டாள்.
வயசுக்கு மீறி பேசும் குழந்தைகளை அதுவரை திரைப்படங்கள்ல மட்டும் தான், பார்த்திருக்கிறேன்; அன்று நேரிலேயே பாத்தேன். இதே கதையை தான், நம் பெற்றோரும், நாமும் படித்துள்ளோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்துள்ளோமா?
அக்குழந்தை, 'காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு வேற வழி தோணலியா மிஸ்?' எனக் கேட்டாள். 'தோணலியே கண்ணு...' என்று, என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஆனாலும், உள்ளுக்குள் குறுகுறுப்பு! குறை கூறத் தெரிந்த குழந்தைக்கு, அதற்கு வழி கூறும் ஐடியா தெரிந்திருக்குமோ என நினைத்து, 'குட்டிமா... இதுக்கு வேற ஏதாவது வழி இருக்குதா செல்லம்...' என்றேன்.
உடனே அது, 'இருக்கே!' என்று கூறி, 'காகம் சாது; பாம்பு துஷ்டன். 'துஷ்டனை கண்டா தூர விலகு'ன்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க... அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி, முட்டை போடலாம்ல்லே மிஸ்... அப்ப, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாதுல்ல...' என்றாள்.
இதைக் கேட்டதும், உறைந்து போனேன். இப்படியொரு கோணத்தில், நாம் ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என, நினைச்சேன் எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.
நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, 'பிளைண்ட்' டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இக்காலத்து பிள்ளைகள், துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.

             படித்ததல் பிடித்தது...

What is maturity?

What is maturity? 

1. Maturity is when you stop trying to change others, ... instead focus on changing yourself.

2. Maturity is when you accept people as they are.

3. Maturity is when you understand everyone is right in their own perspective.

4. Maturity is when you learn to "let go".

5. Maturity is when you are able to drop "expectations" from a relationship and give
for the sake of giving.

6. Maturity is when you
understand whatever you do, you do for your own peace.

7. Maturity is when you stop proving to the world, how intelligent you are.

8. Maturity is when you don't seek approval from others.

9. Maturity is when you stop comparing with others.

10. Maturity is when you are at peace with yourself.

11. Maturity is when you are able to differentiate between "need" and "want" and are able to let go of your wants.

& last but most meaningful! 

12. You gain Maturity when you stop attaching "happiness" to material things! :)

Saturday, May 14, 2016

வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா"

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரைவிற்றுகொண்டு செல்கிறாள் ஒருபெண். வீட்டு வாசலில் மகனோடுஅமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள்.

" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"

" ஓரணாம்மா"

"ஓரணாவா....? அரையணாதான்தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா".

" அதெல்லாம் முடியாது.அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்தத் தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தபெண் கூடையை எடுத்துக்கொண்டுசிறிது தூரம் சென்றுவிட்டு,
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா"என்கிறாள்

"முடியவே முடியாது. கட்டுக்குஅரையணாதான் தருவேன்"... என்று தாய் பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையைக் கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
வாங்கிக் கொண்டு கூடையை தூக்கிதலையில் வைக்க போகும் போது கீழேசரிந்தாள்.

"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலையா...?" என்று அந்த தாய் கேட்க,

"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்றுகூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லிகளையும், அவற்றிற்குத் தேவையான சட்னியையும் வைத்துக் கொண்டு வந்தாள். "
”இந்தா சாப்பிட்டுவிட்டுப் போ" என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும்பார்த்துகொண்டிருந்த அந்தத் தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனீங்க..ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....? என்றுகேட்க

அதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று நெத்தியடியாகக் கூறினாள்.

நெஞ்சைத் தொட்ட அந்தப் பதில், அன்று முழுவதும் மனதையே சுற்றி வந்தது

------ 
படித்ததில் மனதை தொட்டது...

மாமியாரால பிரச்னைன்னு

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும். மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும். மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும். அதேபோல பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்... என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்’னு சொல்லணும். உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை... உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு... நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும். மனசுக்குள்ளயும் சொல்லலாம்... வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும். முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும். நீங்களும் செஞ்சு பாருங்க... பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத்
தருகிறார் ஷீலா.

இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்? இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்.
“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க. ‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க.
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ora scienceனு சொல்வாங்க. 

நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது. உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள். கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ, பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும். இது மாயமோ, மந்திரமோ இல்லை. முற்றிலும் அறிவியல். உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது, அதுவே வைபரேஷனா வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும். எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம். இதுவும் அறிவியல்தான். எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும், எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும், விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான். இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க. அப்படி வாங்கினா கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும். இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு... என்கிறார் டாக்டர் ஜிதேந்திரா.

தனி மனிதன் காப்பு

மே 15 : வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.
தனி மனிதன் காப்பு:
--------------------------

.
"ஒவ்வொரு மனிதனும் பிறந்திருக்கின்றான், அவன் அறிவிலே முன்னேறிவர வேண்டியது தான் பிறவியினுடைய நோக்கம்;  இது தான் இயற்கையினுடைய இயல்பு, அது கெடக் கூடாது. அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றபோது "தனி மனிதன் காப்பு" (Security) என்பது அங்கு தான் உண்டாகின்றது.  உலகம் முழுவதிலும்,  மேல் நாட்டிலே கூடப் பல இடங்களில் என்னிடம் கேட்பதுண்டு,  சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்று.  "தனி மனிதனுடைய சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் கேட்கின்றீர்கள்; 

.
சுதந்திரம் இருக்கின்றது அந்த சுதந்திரத்தைக் காப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கின்ற போது,  கட்டுப்பாட்டினால் தான் சுதந்திரம் உண்டாகும்.  பிறர் சுதந்திரத்தை அழித்துவிடக் கூடாது என்ற ஒரு பேருணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வந்து அவனுடைய செயல்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளும் போது தான் சுதந்திரம் எல்லோருக்கும் கிட்டுமே தவிர,  சுதந்திரம் என்பது தானாக விரும்பும் காரியத்தை எல்லாம் தங்கு தடையின்றிச் செய்வதற்கு ஒரு வாய்ப்பு என்று வைத்துக் கொள்வது தவறான கருத்தாகும்", என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு.  ஆகவே சுதந்திரம் என்பது உண்மையாக எல்லோருக்கும் வேண்டுமானால்,  பிறருடைய சுதந்திரத்தை நாம் காக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளக் கூடிய கட்டுப்பாடுகளில் தான் எல்லோருடைய சுதந்திரமும் காக்கப்படும்;  ஒவ்வொரு தனி மனிதனுடைய பாதுகாப்பும் அமையும்." 

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
சிறந்த சூழ்நிலையும், சிந்தனையாளர் கடமையும்:-

"பிறந்து விட்டோம், வாழ்கின்றோம், அனுபவித்தோம்;
பெற்ற பலன் இன்பம் துன்பம் இரண்டேயாகும்.
இறந்துவிடப் போகின்றோம் என்றோ ஒரு நாள்.
இதற்குள்ளே அமைதிபெற உலக வாழ்வைத்
துறந்துவிட முடியாது.  தொல்லை நீங்கிச்
சுகமாய் மனித இனம் வாழ்தற்கேற்ப
சிறந்தபடி சூழ்நிலைகள் அமைக்க வேண்டும்
சிந்தனையில் உயர்விலுள்லோர் கடமை ஈது".

.
பிறப்புரிமையும் சுதந்திரமும் :

"பிறப்புரிமை சுதந்திரம் இப்
பேறுகள் நம் உடல் உயிர் போல்
போற்றிடுவோம் காத்திடுவோம்
புரை யொழித்து வாழ்ந்திடுவோம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Friday, May 13, 2016

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்.

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-
====================

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.
24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…
அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?
எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

- சுஜாதா

Tuesday, May 3, 2016

பிண்ணாக்கீசர் எனும் தன்னாசியப்பர் ஜீவசமாதி -கோவை--பெரியநாயக்கன் பாளையம் :

பிண்ணாக்கீசர் எனும் தன்னாசியப்பர் ஜீவசமாதி -கோவை--பெரியநாயக்கன் பாளையம் : 

                
            >> ஆதி- பதினெட்டு  சித்தர்களின் ஒருவரான பிண்ணாக்கீசர் காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற தெய்வீகத் திருத் தலமான சென்னிமலையில்  ஜீவசமாதி கொண்டுள்ளார் . இவர்க்கு தன்னாசியப்பர் என்ற நாமமும் உள்ளது . பிண்ணாக்கீசர் --பிளவு பட்ட நாக்கினால் யோக சித்தி பெற்றவர் . 

       சர்ப்ப யோகமான இலம்பிகா யோகம்  :: 
                      >>  இந்த யோகியால் பின்பற்ற பட்டது.சிலருக்கு இயற்கையாக நாக்கு பிளவு பட்டதாக இருக்கும் ..சிலர் நாக்கின் அடி பக்கத்தை அறுத்து விட்டுகொள்வர். பிண்ணாகீசர்க்கு இயற்கையாக நாக்கு பிளவு பட்டதாக இருந்தது பிளவு பட்ட நாக்கில் ஒன்றை தொண்டையின் மேல் பகுதியில் நுழைத்து தலை உச்சி பகுதியில் கொண்டு வந்து வைத்து கொள்வர் ..இதனால் பசி தாகம் இல்லாத சித்து நிலை வரும் ..இது சித்தர்களின் உன்னதமான நிலை ஆகும்.. இவ்வகை யோகிகள் ஒரு நாக்கால் மற்றொரு நாக்கை இழுத்து விட்டு கொண்டு சகச நிலைக்கு திரும்புவார்கள் . நாக்கை நடு நாடியில் செலுத்த கபாலதேன் எனும் அமுது சுரக்கப்படும் ..அதனால் மெய்ஞானம் பிறக்கும்.

   

          >> சென்னிமலையில்  ஜீவசமாதி பெற்ற பிண்ணாக்கீசர் எனும் தன்னாசியப்பர் கோவை--பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த செல்வபுரத்திலும் ஜீவ ஐக்கியம் பெற்று உள்ளார் .கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆளரவமே இல்லாத இந்த மலைக்கு அருகே  உள்ள சிறிய குகையில் தன்னாசி அப்பர் எனும்  சித்தர் ஒருவர் வசித்து வந்தார். இவர் தினமும் மலையடிவாரத்தில் இருந்த ஆலமரத்திற்கு கீழ் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். அப்பகுதியில் கால்நடை மேய்ப்போர் இவரிடம் பழகி வந்தனர். யாரிடமும் அதிகம் பேசாமல் அடிக்கடி நிஷ்டையில் இருந்த இவரின் முகத்தில் இருந்த தேஜஸக் கண்டு பின்னாளில் வணங்க ஆரம்பித்தனர். அத்துடன் தமக்கு வந்த கஷ்டங்களை சொல்லி அதனை போக்கவும் வேண்டினர். அவர் அருளாசி வழங்கியதால் நோய்கள் பறந்தோடின. இதனால் சித்தரின் புகழ் மற்ற கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.

            >>   இந்நிலையில் ஒருநாள் குகைக்குள் சென்றவர் மீண்டும் வெளியில் வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மக்கள் அவரின் வரவிற்காகக் காத்திருந்தனர். குகைக்குள் செல்லவும் பயம். ஆனால் இறுதிவரை அவர் வெளியில் வரவே இல்லை. பெரும்பாலும் வெகு அமைதியாக வனவிலங்குகள் சுற்றித் திரிந்த அந்த பகுதியில் அவரை வணங்கக் காத்திருந்தவர்கள் அவர் வராமல் போகவே வருத்தமடைந்தனர். அவர் தவம் செய்த ஆலமரத்திற்கு கீழ் சிலை வைத்து அவரை வணங்க ஆரம்பித்தனர். பிற்காலத்தில் பலர் தங்கள் நோய் தீர அங்கேயே தங்கி வணங்கினர். வனவிலங்குகள் அதிகமிருந்ததால் ஆண்டிற்கொரு முறை மட்டும் அங்கு விழா நடத்திக் கொண்டாடினர். தற்போது பல்வேறு பக்தர்களின் பணியினால் இன்று மிகப் பெரிய ஆலயமாகத் திகழும் இக்கோயிலில் இரு வேளை பூஜை நடக்கிறது.

          >>  பக்தர்களின் அருட்கொடையால் தற்போது கருவறை,விமானம், முன்மண்டபம் கட்டப்பட்டு சிறப்புறக் காட்சியளிக்கிறது. கருவறையில் தன்னாசி ஈசர் மிகப் பெரிய மீசையுடன் அருள்பாலிக்கிறார். கோயிலின் தெற்குப் பகுதியில் விநாயகர் கோயில் உள்ளது. வடக்குப் பகுதியில் பெருமாள் கோயிலும், அதற்குப் பின்னால் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளன. மேற்குப் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது.
பதினெட்டு சித்தர்களுக்கும் கோவில் அமைத்து உள்ளனர் 

       >> மருத்துவ சிகிச்சைகளால் தீர்க்க முடியாத  புத்திசுவாதீனம் இல்லாதவர்கள்,பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் தங்கி மூலிகை சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தற்போது உள்ள அர்ச்சகர் இதனைச் செய்கிறார். இந்நோய்களால் பாதிக்கப்பட்ட பலர் இங்கே தங்கி தன்னாசி ஈசரின் அருளால் குணமாகிச் செல்வது காலங்காலமாக நிகழ்ந்து வரும் அற்புதம்.

அமைவிடம்: கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீரபாண்டி பிரிவில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே திருமலைநாயக்கன்பாளையம் வழியாக 5 கி.மீ. தொலைவில் உள்ள செல்வபுரம் கிராமத்திற்கு வரவேண்டும். இதுவரை பேருந்து வசதி உள்ளது. இதற்கு பின் மீண்டும் மேற்கே 2 கி.மீ. தொலைவு தோட்டங்களினூடே செல்லும் பாதையில் நடந்து சென்றால் கோயிலை அடையலாம். தங்குவதற்கு வசதியுண்டு.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை.மாலை 4 மணிமுதல் 7 மணிவரை.