Saturday, October 29, 2016

பகை கடிதல்!

பகை கடிதல்!


பகை கடிதல்
"பகை கடிதல்" என்னும் "இந்தத் திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திருமயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர்."என பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது!

படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். "ஏ! மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டுவா!" என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது!
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் கீழ்வருமாறு:
திருவளர் சுடருருவே சிவைகர மமருருவே
அருமறை புகழுருவே யறவர்க டொழுமுருவே
இருடபு மொளியுருவே யெனநினை யெனதெதிரே
குருகுகண் முதன்மயிலே கொணர்தியு னிறைவனையே.
1
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே! அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக!!!!!

(விசேடம்) திரு - தெய்வத்தன்மை, பேரழகு முதலிய பல பொருளொரு சொல். அறவர்கள் - முனிவர்களுமாம். முருகவேளை அகத்தியர், நாரதர், பராசர புத்திரர்களான ஆறு முனிவர்களும் தொழுதருள் பெற்றனர். இருள்தபும் ஒளியுரு - புற இருள் நீக்கும் சூரியன் போலாது அக இருளையும் ஓட்டும் ஆற்றலுடைய ஒளியுருவினன் என்க. "ஓவற இமைக்கும் சேண்  விளங்கு அவிர் ஒளி" என்பர் நக்கீரர். குருகுகள் - பறவைகள். மயில், முருகவேல் திருவடிகளைத் தாங்கும் தனிச்சிறப்பால் "குருகுகள் முதல்" எனப்பட்டது. இறைவன் - எல்லா உயிர்களிலும் தங்குபவன். மயிலிறை எனவே, மயிலுக்குத் தலைவனான செவ்வேல் என்றபடி.
மறைபுக ழிறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முகவுருவே யெனநினை யெனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியு னிறைவனையே.
2
மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திருமுன்பிருந்தே மூல மந்திரப் பொருள் விரித்த குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திருமுகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக்குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு வருவாயாக!!!!!
இதரர்கள் பலர்பொரவே யிவணுறை யெனதெதிரே
மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையெனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொருமயிலே கொணர்தியு னிறைவனையே.
3
இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என என்னும்படி ஒளிவளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!!!!!
பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே.
4
பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமை பொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே! உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
அழகுறு மலர்முகனே யமரர்கள் பணிகுகனே
மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே
இழவில ரிறையவனே யெனநினை யெனதெதிரே
குழகது மிளிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
5
அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே! தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே! எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்) தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க!!!!!
இணையறு மறுமுகனே யிதசசி மருமகனே
இணரணி புரள்புயனே யெனநினை யெனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற வெழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியு னிறைவனையே.
6
இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) மற்றொப்பாரில்லாத அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
எளியவ னிறைவகுகா வெனநினை யெனதெதிரே
வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான்
பலபல வெனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியு னிறைவனையே.
7
எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) ஏழையாகிய அடியேனது இறைவா! குகா! என்று தியானிக்கும் என் எதிரில் வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழிபடைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
இலகயின் மயின்முருகா வெனநினை யெனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கலவெனமா கவினொடு வருமயிலே
குலவிடு சிகைமயிலே கொணர்தியு னிறைவனையே.
8
இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
இகலறு சிவகுமரா வெனநினை யெனதெதிரே
சுகமுனி வரரெழிலார் சுரர்பலர் புகழ்செயவே
தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே
குகபதி யமர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
9
இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) சிவகுமார! என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே
மருமல ரணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
10
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) அருள்மழை பொழியும் கருணை மேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

(விசேடம்) பாம்பனடிகள் பிரப்பன் வலசைப் பெருந்தலத்தில் 35 நாட்கள் நிட்டை கூடியபோது காளைக் குமரேசன் அவர் திருமுன் அகத்தியர், அருணகிரி என்ற இரு முனிவர்களுடன் காட்சி அளித்தான். இப்பாட்டில் அந்த இரு முனிவர்களையும் ஒருசேர அமைத்திருப்பது விசேடமாம். சுவாமிகள் பாடல்கள் சிலவற்றில் தான் இரு முனிவர் திருநாமங்களும் ஒரே பாட்டில் வரும். எனவே, இப்பாடலில் தாம் பெற்ற உபதேச நினைவும் நிழலாடக் காணலாம். இதில் பிணி நீக்கும் மருத்துவக் கலைஞர் அகத்தியரும் அருள் நோக்குக்கு உதவும் அருணகிரியாரும் பகை நீக்க அருளும் மயூரநாதனும் வருவது உணர்ந்து மகிழத்தக்கது.

குமாரஸ்தவம்!

குமாரஸ்தவம்!


ஓம் குமரகுருதாச குருப்யோ நம :
குமாரஸ்தவம்

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம:
ஆறுமுக தலைவனுக்குப் போற்றி போற்றி.

2. ஓம் ஷண்மத பதயே நமோ நம:
ஆறுவகை சமயங்களின் தலைவனுக்குப் வணக்கம்.

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
ஆறு கழுத்துக்களையுடைய தலைவனுக்கு வணக்கம்.

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம:
ஆறு கிரீடங்களை (முடிகளை) அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்.

5. ஓம் ஷட்கோன பதயே நமோ நம:
அறுகோண (சக்கரத்தில் எழுந்தருளியுள்ள) தலைவனுக்கு வணக்கம்.

6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம:
ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்.

7. ஓம் நவநிதி பதயே நமோ நம:
ஒன்பது வகையான நிதிகளின் தலைவனுக்கு வணக்கம்.

8. ஓம் சுபநிதி பதயே நமோ நம:
பேரின்ப முக்தி நிலையத் தலைவனுக்கு வணக்கம்.

9. ஓம் நரபதி பதயே நமோ நம:
அரசர் தலைவனுக்கு வணக்கம் (நரபதி - மக்கள் அரசன்).

10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம:
தேவ ராஜனான தேவேந்திரனுக்கும் மகா தேவனான சிவனாருக்கும் முறையே ஆட்சியையும் உபதேசமும் அளித்த அண்ணலான சுரபதிக்கு வணக்கம்.

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
கூத்தப் பிரானான அறுமுகச் சிவனாருக்கு வணக்கம்.

12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:
ஆறெழுத்து இறைவனுக்கு அநேக வணக்கம்.

13. ஓம் கவிராஜ பதயே நமோ நம:
கவிராஜ ராஜனாகிய தலைவனுக்கு வணக்கம்.

14. ஓம் தபராஜ பதயே நமோ நம:
தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்.

15. ஓம் இஹபர பதயே நமோ நம:
இவ்வுலகத்திற்கும் மறுமையிலடையும் சுவர்க்கம் முதலிய உலகத்திற்கும் தலைவனான குமரனுக்கு வணக்கம்.

16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம:
திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரினாதருடைய தலைவனுக்கு வணக்கம்.

17. ஓம் ஜயஜய பதயே நமோ நம:
வெற்றி மிக்க இறைவனுக்கு வணக்கம்.

18. ஓம் நயநய பதயே நமோ நம:
மிக்க இனிமையைச் செய்யும் தலைவனுக்கு வணக்கம்.

19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
அழகு குருவான தலைவனுக்கு வணக்கம்.

20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:
தேவகுஞ்சரி என்னும் தெய்வானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்.

21. ஓம் வல்லீ பதயே நமோ நம:
வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்.

22. ஓம் மல்ல பதயே நமோ நம:
மல் போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்.

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
வேல் முதலிய தெய்வப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:
சாஸ்திரங்கள் என்ற கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.

25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம:
சஷ்டி திதியில் அமைந்த கந்த விரதத் தலைவனுக்கு வணக்கம்.

26. ஓம் இஷ்டி பதயே நமோ நம:
(வேள்வி) யாகத் தலைவனுக்கு வணக்கம்.

27. ஓம் அபேத பதயே நமோ நம:
வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்.

28. ஓம் ஸுபோத பதயே நமோ நம:
மெய்யுணர்வு அருளும் தலைவனுக்கு வணக்கம்.

29. ஓம் (வ்) வியூஹ பதயே நமோ நம: (
சேனைகளின்) அணிவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்.

30. ஓம் மயூர பதயே நமோ நம:
மயூர நாதனுக்கு வணக்கம்.

31. ஓம் பூத பதயே நமோ நம:
பூதங்களின் தலைவனுக்கு வணக்கம்.

32. ஓம் வேத பதயே நமோ நம:
வேதநாதனுக்கு வணக்கம்.

33. ஓம் புராண பதயே நமோ நம:
பழமையான (புராணங்களுக்குத்) தலைவனுக்கு வணக்கம்.

34. ஓம் (ப்) பிராண பதயே நமோ நம:
ஆன்ம நாதனுக்கு வணக்கம்.

35. ஓம் பக்த பதயே நமோ நம:
அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்.

36. ஓம் முக்த பதயே நமோ நம:
பாச பந்தங்களில் இருந்து விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்.

37. ஓம் அகார பதயே நமோ நம:

38. ஓம் உகார பதயே நமோ நம:

39. ஓம் மகார பதயே நமோ நம:
மூல மந்திரமாகிய "ஓம்" என்ற பிரணவம் அகரம், உகரம், மகரம் என்று பிரியும். இம்மூன்று ஒலிகளும் முறையே ஆகல, காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் அவற்றை செய்யும் அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகளையும் உணர்த்தும். அந்த மும்மூர்த்திகளையும் அதிஷ்டித்து நிற்கும் முருகனே மூவர் தேவாதிகள் தம்பிரான் ஆவான். அவனே பிரணவ வைசியன் என்க.

40. ஓம் விகாச பதயே நமோ நம:
எங்கும் துன்றி நிறைந்த இறைவனான குகபதிக்கு வணக்கம்.

41. ஓம் ஆதி பதயே நமோ நம:
எல்லாவற்றிற்கும் முதற் காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்.

42. ஓம் பூதி பதயே நமோ நம:
சகல ஐஸ்வரியங்களுக்கும் அண்டங்களுக்கும் நாயகனுக்கு வணக்கம்.

43. ஓம் அமார பதயே நமோ நம:
மாரவேளை எரித்த மாதேவருக்குத் தலைவனுக்கு வணக்கம்.

44. ஓம் குமார பதயே நமோ நம:
குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

மங்கலவுரை

குமாரஸ்த்வம் என்ற இச்சிறுநூல் ஓர் ஆறெழுத்து மந்திர மறையாகும். இந்நூலின் முதல் ஆறு அடிகள் ஆறு என்ற எண் அமையவருவது குறிப்பிடத்தக்கது. இதில் குமாரபிரானது திருமுகம், திருக்கைவேல், மயில், இரு தேவியர் முதலிய அனைத்தும் பேசப்படுவதால் இதனைப் பாராயணம் செய்வோர் குமாரப்பெருமானை இரு தெவியற்களோடும் மயில்மீது தரிசிக்கப் பெறுவர் என்பதும் குமாரப் பெருமான் திருவருளும், பாம்பனடிகள் குருவருளும், சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வையும் தந்தருளும் என்பதும் திண்ணம்.
"பாம்பனடிகள் பதமலர்க்கே அடைக்கலம்"
"ஓம் குமாராய நம : 

கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம்நீங்கிவிடும்

பசு வழிபாடு !


இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும்புண்ணியமாகக

 கருதுகின்றனர்இந்தப் பசுவை கோமாதாஎன்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.பசுவின் உடலில்
ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாக கருதுகின்றனர்.
*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன்,திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலியபுண்ணிய தீர்த்தங்கள்,
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர்சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும்சுக்கிலத்திலும் – யாகத் தொழில்முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்காநிறையுடைய
 கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் 
இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டனஅவைநந்தாபத்திரைசுரபி
சுசீலைசுமனை ஆகியவை. . இவைபொன்னிறம்கருமைவெண்மைபுகைசிவப்பு நிறம்கொண்டிருந்தனஇவற்றின் சந்ததிகளே பூலோகத்தில்நமக்கு உதவியாக இருந்து வருகின்றனஇவற்றில்இருந்துவரும் கோமயம்(சாணம்),  
மூத்திரம்(கோமியம்), பால்தயிர்வெண்ணெய் ஆகியஐந்தும் புனித
மானவைஇவற்றை குறிப்பிட்ட அளவில்கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது
இப்பசுக்களில் மும்மூர்த்திகள்சத்தியம்தர்மம்என்று எல்லா தேவதைகளும்வசிக்கின்றனர்செல்வவளம் தரும் திருமகள் இதன்பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்வசிக்கிறாள்இப்பகுதியைதொட்டு வழிபட்டால் 
முன்ஜென்ம பாவங்கள்விலகும்காலையில் எழுந்ததும் பசுவைத் 
தொழுவத்தில்காண்பது சுபசகுனம் தெருக்களில் கூட்டமாகப் 
பார்த்தால்இன்னும் விசேஷம்பாற்கடலில் பிறந்த 
ஐந்துபசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து
அருள்பாலிப்பதாக ஐதீகம்பசுவைத் தெய்வமாகவழிபட்டால் 
கோலோகத்தை அடையும் பாக்கியம்உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின்வாசஸ்தலம்.
வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவதுகோலோகம்.

கோமாதாவின் உடற் பகுதியும்   அங்கே அருளும்தெய்வங்களும்
1. முகம் மத்தியில்                       சிவன்

2. வலக் கண்                               சூரியன்

3. இடக் கண்                               சந்திரன்
4. மூக்கு வலப்புறம்                     முருகன்
5. மூக்கு இடப்புறம்                     கணேசர்
6. காதுகள்                                    அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம்                     ராகு
8. கழுத்து கீழ்புறம்                        கேது
9. கொண்டைப்பகுதி                     ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம்           சரஸ்வதிவிஷ்ணு
11. முன்வலக்கால்                         பைரவர்        
12. முன் இடக்கால்                        ஹனுமார்
13. பின்னங்கால்கள்                      ப்ராசரர்விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி             நாரதர்வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம்                கங்கை
16. பிட்டம் - மேல்புறம்                லக்ஷ்மி
17. முதுகுப்புறம்                           பரத்வாஜர்குபேரர் வருணன்,அக்னி    
18. வயிற்றுப்பகுதி                        ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி                     நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி                       ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு                            வீமன்
22. இடக்கொம்பு                            இந்திரன்
23. முன்வலக்குளம்பு                     விந்தியமலை
24. முன்இடக்குளம்பு                      இமயமலை
25. பின் வலக்குளம்பு                      மந்திரமலை
26. பின் இடக்குளம்பு                      த்ரோணமலை
27. பால்மடி                                      அமுதக்கடல் 

பசு வழிபாடு வகை

வழிபாடு இரண்டு வகைப்படும்.

1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால்அலங்கரித்து

எல்லா மந்திரங்களும் கூறிமலர்களால் அர்ச்சித்துதூப,தீபநிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.ஈசனைவிக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபடமுடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்துவழிபடுவது போலவீட்டில்கோமாதாவின் படத்தைமட்டும் வைத்து 

வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்

2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடாவிட்டாலும்வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கேஉதவுவதாக அவற்றின் நலனைப் 
பாதுகாத்துப்பராமரிப்பதும் பசுவழிபாடேஇரண்டாம் வகை பராமரிப்புவழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடுநடக்க முடியும்.கோமாதாவில் (பசுமுப்பத்து முக்கோடிதேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்அதன்பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக 
ஐதீகம்.எனவேகோமாதா பூஜை செய்யும் போதுபசுவைமுன்புறமாக
 தரிசிப்பதைவிடபின்புறம் தரிசனம் செய்வதுமிகவும் நன்மை தரும்
பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் 
சந்தனம்குங்குமம் வைத்துமலர் அணிவித்துவழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும்எனவேதான்அதிகாலையில் 
சாணத்தைவீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.பசுவுக்கு பூஜை செய்வதுபராசக்திக்கு பூஜை செய்வதற்குச்சமமாகும்.பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலானமும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம் 
என்றொருதெய்வம் உண்டு.
சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்திஇருக்கிறார்.

இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாகமனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்திஇருக்கிறாள்.இவளே இந்த பிரபஞ்சம்,உலகம்,
உயிர்கள்என அனைத்தையும் படைத்து,காத்து,
ரட்சிப்பவளாகஇருக்கிறாள்
இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன்வாழ்ந்து வருகிறாள்.இதனாலேயே,முப்பத்துமுக்கோடிதேவர்களும்,

நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சிசெய்கின்றன.

கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்தஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.
(உருவ வழிபாடுஇல்லை என சொல்லும் மதத்தினர் கூட 

கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)

கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம்நீங்கிவிடும்;குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்டசக்திகள் நெருங்காதுமுற்பிறவியில் செய்த பாவங்கள்நீங்கிவிடும்

பணவளக்கலை  program - 97900  44225