Friday, December 25, 2015

மார்க்கெட்டிங் வேலை செய்பவர்

மார்க்கெட்டிங் வேலை செய்பவர் ஒருவர் ஆறேழு மாசமா ஒரு டாக்டரிடம் வந்து போயிட்டு இருந்தாரு...!

டாக்டர் பொண்ணு அவர் சின்சியாரிட்டியை
பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா...❤

இந்த விசயம் டாக்டருக்கு தெரிஞ்சு போச்சு., 

டாக்டர்  "என் பொண்ண ஒரு பிச்சைகாரனுக்கு 
கல்யாணம் பண்ணி தந்தாலும் தருவேன்... ஆனால்,
ஒரு மார்கெட்டிங் வேலை செய்பவனுக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேனு" 
சொல்லிட்டாரு...😰

டாக்டர் பொண்ணுக்கு தோஷம் இருக்கு அவளை 
யார் கல்யாணம் பண்ணினாலும் ஒரே மாசத்துல 
செத்துடுவாங்க...😛😔

டாக்டர் அவர் பொண்ணை ஒரு டாக்டருக்கு 
கல்யாணம் பண்ணி வைக்கிறாரு...!

அந்த டாக்டர் ஒரே மாசத்துல செத்துடுறான்...!!
செத்தான்டா சேகரு...!!

அப்புறம் இன்ஜினியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்...!
அந்த இன்ஜினியரும் செத்து போயிடுறான்...!!

அடுத்ததா, ஒரு
ஆசிரியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்.
அந்த ஆசிரியரும் செத்து போயிடுறான்...!!😱 

என்னடா இது நம்ம பொண்ணு வாழ்க்கை இப்பிடி 
ஆகிடுச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணி., சரி அந்த மார்க்கெட்டிங் வேலை செய்பவனுக்கே மேரேஜ் பண்ணி வச்சுடலாம்னு முடிவு பண்ணி...

அவர் கால்ல விழுந்து, கெஞ்சி, கூத்தாடி
மேரேஜ் பண்ணி வச்சுட்டாரு...!😀

 எல்லோரும் மாா்க்கெட்டிங் வேலை பாா்ப்பவன் ஒரு மாசத்துல செத்துடுவான்னு எதிர்பார்த்துட்டு இருந்தாங்க...!!

ஒரு மாதம் ஆச்சு, மூன்று மாதம் ஆச்சு, 
ஒரு வருஷம் ஆச்சு ஆனால் அவன் சாகவில்லை...!!!???

எல்லோருக்கும் பொிய ஆச்சரியம்...!

செத்து போன அந்த டாக்டர், இன்ஜினியர், ஆசிரியரும்
சேர்ந்து எமன்கிட்ட முறையிடுறாங்க...😰😰😰

அந்த பொண்ணு ஜாதகப்படி அவளை கட்டிகிட்டவன் ஒரே மாசத்துல செத்துருவான்னு தானே இருக்கு...!?
அதனாலதான் நாங்க எல்லோரும் இங்க இருக்கோம்...!?

ஆனால் அவனுக்கு ஒன்னும் ஆகவில்லையே எப்படி...!!!??? 

எமதா்மா, இது நியாயமா...

அதற்கு எமன் சொல்றாரு,  
அந்த டாக்டர பிடிக்க அவரோட ஹாஸ்பிடல்ல 
வெயிட் பண்ணிட்டு இருப்பேன், 
டாக்டர் வந்த உடனே பிடிச்சுட்டு வந்துடுவேன்.
 
இன்ஜினியரை பிடிக்க அவரோட ஆபிஸ்ல வெயிட் 
பண்ணிட்டு இருப்பேன்.. 
இன்ஜினியர் வந்த உடனே அவரை பிடிச்சுட்டு 
வந்துடுவேன்..

அதே மாதிரி ஸ்கூல்ல வெயிட் பண்ணி ஆசிரியரை 
பிடிச்சிடுவேன், 

ஆனா, இந்த மார்க்கெட்டிங் வேலை பாக்குற பயபுள்ள இருக்கே...!? அய்யோ...அய்யோ... ( எமனே அழறாரு😭😭)

அவனோட டூர் ப்ளான்ல, நாமக்கல்னு போட்டிருந்தான்...
அதை நம்பி நான் நாமக்கல்ல வெயிட் பண்ணிட்டு 
இருந்தேன். ஆனா அவன் மேட்டூர்ல வொர்க் பண்ணிட்டு 
இருந்தான்... 

சரின்னு விட்டுட்டேன்,  அடுத்த நாள் ஆத்தூர்னு போட்டிருந்தாப்ல
நான் ஆத்தூர்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன்,
ஆனா சேலத்துல வொர்க் பண்ணிட்டு இருக்காப்ல... இப்படியே, பல மாதங்கள் கடந்து விட்டன...இன்னும் இந்த கதை முடிய மாட்டேங்குது...😭😭😭

டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல ஈசியா 
பிடிச்சுடலாம்னு நினைச்சேன், ஆனால் இந்த 
எமனுக்கே எட்டு போட்டு அதோட நிக்காம, பதினொன்னு போட்டு காட்றான்யா...!? 
எமனே
தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாரு...😭😭😭

எமனை மட்டுமில்லை., 
எவனையும் சமாளிப்பான் இந்த மார்கெட்டிங் வேலை பாா்ப்பவன்...!
அப்புறம், மாா்க்கெட்டிங் வேலை பாா்க்கிறதுன்னா சும்மாவா...!😜😂

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்...

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்...

சமையல் பிரியர்களே Share செய்யுங்கள்

இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்...

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்...

சமையல் பிரியர்களே Share செய்யுங்கள்

இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே

what is the procedure of registering a trademark?

what is the procedure of registering a trademark?

Step 1: Search for a “crazy-enough” brand name

You get the point, don’t you? Come up with a whacky and quirky brand name, because all the generic ones are any which way taken. Before zeroing in on one name, you might want to do a quick search to make sure that no one else is already using the name. And your best bet would be to use invented or coined words, in a combination with generic words.

Step 2: Making the trademark application

Now that your name is finalized upon, fill in the trademark application i.e. Form- TM 1. The application costs INR 3500 and is a one time fee.

Along with the application, you will need to submit a couple of supporting documents:

1. A Business registration concern: Depending on what type of a registered business you have, say sole proprietorship, etc. you will need to submit an identity proof of the directors of the company and an address proof.

2. An image of your brand logo in a standard size of 9 x 5 cms

3. If applicable, proof of claim of the proposed mark being used before in another country.

Step 3: Filling the brand name registration application

There are 2 ways to file the registration – manual filing or e-filling.

In case of manual filing, you will need to personally walk down and submit the application for registration to any one of the offices of the Registrar of Trade Marks located in Mumbai, Delhi, Kolkata, Chennai and Ahmedabad. After which you receive the acknowledgement of the application and the receipt, usually within 15-20 days of the filing.

But in e-filing system, the acknowledgement of the application is issued immediately.

And after you receive the acknowledgement, you can start using the (TM) symbol next to the brand name!

Step 4: Examining the brand name registration application

After receiving the application, the Registrar checks whether the brand name complies with the law and does not conflict or dispute with other existing registered or pending brands. That’s why we said, quirky brand name, people!

Step 5: Publication in the Indian Trade Mark Journals

After examination, the logo or brand name is published in the Indian Trade Mark Journal. If no one raises an opposition within 3 months i.e. 90 days or in some cases 120 days, from the date of publication, the brand name proceeds to acceptance.

Step 6: Issuance of the trademark registration certificate

If no one raises any opposition, within the stipulated 90 days period, the Registrar accepts the trademark application! Woohoo! And issues a Certificate of Registration under the seal of Trademark Registry.

You may now be allowed to use the registered trademark symbol (®) next to your brand name, once the certificate has been issued.

TrademarkThe whole process of registration of a brand name usually takes anything between 15-18 months. The trademark once accepted, is valid for a period of 10 years from the date of issuance of the Certificate of Registration. After the end of 10 years, the trademark will need to be renewed.

There there! We can understand if this sounds a little too over-whelming. In which case, just call up a lawyer. :) The lawyer will be able to help you wade through all this legal jargon.

Although the process of registering a trademark is lengthy and a little heavy on the pocket, it is definitely worth the investment of legally protecting your brand.

However, if you are just starting out, investing in a trademark may not be absolutely essential. What matters most is creating awesome products and putting in all the time and effort into building your brand, from ground up. But, there still is another cheaper alternative to lend you lawful protection against being copied – an unregistered trademark. Do ask your lawyer about it!

Wednesday, December 23, 2015

யப்பா.. இப்படி வேறு ஹீரோவிடம் கேட்டிருந்தால் பதிலே வந்திருக்காது. ஆனால் ஆத்திரப்படாமல், மனதில் உள்ளதை பகிர்ந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.!


உங்கள் விருப்பத்துக்கு கதையை மாற்றுகிறீர்களே?

படங்களில் தனியாக பத்து இருபது பேரை அடித்து வீழ்த்துவது நம்பக்கூடியதா?

வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?

தொப்பி போட வழுக்கை காரணமா?

நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவது உண்மைதானே

படம் ஓடாததால் அரசியலுக்கு வருகிறீர்களா?

–   யப்பா.. இப்படி வேறு ஹீரோவிடம் கேட்டிருந்தால் பதிலே வந்திருக்காது. ஆனால்  ஆத்திரப்படாமல், மனதில் உள்ளதை பகிர்ந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.! எப்போதோ எடுத்த பேட்டிதான்…   ஆனால் இதற்கு முன்னும் பின்னும் ஒரு நடிகரின் பேட்டி இப்படி வந்ததில்லை!


நீங்கள் நடிக்க வந்தது ஏன்?

வறுமைதான்.

நாடக உலகில் இருந்து வந்தவர் நீங்கள். அதில் பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?

பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.

ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?

இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்தி படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்.

மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?

தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். .
மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாள படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.

கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?

நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில்
அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போக அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.

நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?

என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.

imagesf

அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?

கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே
எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனை தேடுகிறேன். கிடைக்கவில்லை.

ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப்பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்.

சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம்  இருந்தால் நல்லது என்பேன்.

3

உங்கள் விருப்பத்துக்கு கதையை மாற்றுவதாக புகார் உண்டு. ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?

ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும்.. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்.

சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?

ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம்
காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது.

aa

பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக்கூடியதா?

தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி
ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்.

imagesw

வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?

விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னை சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்.

உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?

வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.

mgr yesu

கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?

அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய்
வந்தேன்.

d

திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?

அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்’ என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே
தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்.

வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?

தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி
விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்? யார் என்ன சொல்வார்களோ
என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து
விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு’ என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்.

indexe

சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?

என்னை சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி
எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.

நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவது உண்மைதானே?

உண்மைதான். ஏன் வாங்குகிறார்கள்? ஒரு லட்சம் சம்பாதித்தால் அதில் 97 ஆயிரத்தை வரியாக கேட்கிறார்கள். நடிகன் சாதாரணமாக வாழ முடியாது.
அதிகம் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம். எங்கள் தொழில் அப்படி. இதில் நுழைந்த முதல் நாளே லட்சங்களில் சம்பாதித்துவிட முடியாது. யாரும் தர மாட்டார்கள். நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு நடிகனும் படாத கஷ்டம் இல்லை. அங்கே இங்கே கடன் வாங்கி காலத்தை கழிக்கிறான். அதை எல்லாம் வரி அதிகாரிகள் கணக்கில் எடுப்பதில்லையே.

அரசும் சட்டமும்தான் இப்படி ஏமாற்ற வைக்கிறது.

நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார்  ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். 

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

-தமிழ் அறிவு கதைகள்

தயக்கம் தயக்கம் தயக்கம்

நீல் ஆம்ஸ்ட்ராங்... 

இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்... 

ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?... 

பல பேருக்கு தெரியாது...

அவர், எட்வின் சி ஆல்ட்ரின்... 

இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். 
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல... 

"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை... 
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..." 

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது... 
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது... 

நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...

பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...

தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...

அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...

ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...

சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...

எனவே, நல்ல விஷயங்களில்...
 
தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிர்ப்போம்...

Tuesday, December 22, 2015

நான் ப ட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ?

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
...........................................

இன்றையநாள் தங்களுக்குஉற்சாகமும்,
உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்..

இன்றைய சிந்தனை..
.................................... 
நான் ப ட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்
படக்கூடாது" - இது நல்லதா ?
.....................................
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி
வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக்
கூடியவை.
அவற்றை வலிமை மற்றும் தைரியம்
ஆகியவற்றின் சின்னமாகக்
கருதுகின்றோம்.
ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச
சக்திகளும், வலிமையும், தைரியமும்
பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை
கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக்
கொள்ளப்படுபவை தான். 

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக,
பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள்
பலவீனமாகவே இருக்கின்றன.
அவை அப்படியே சுகமாகவும்,
பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால்
வலிமையாகவும், சுதந்திரமாகவும்
மாறுவது சாத்தியமல்ல. 

எனவே
குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய
உணவளித்து, பாதுகாப்பாக
வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள்
பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி
விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும்
படுக்கையினைக் கலைத்து சிறு
குச்சிகளின் கூர்மையான பகுதிகள்
வெளிப்படும்படி செய்து கூட்டை
சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து
விடுகின்றது.

பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து
இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத்
தூண்டுகின்றது.

தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத
கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை
வந்து நிற்கின்றது.

அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின்
வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும்
உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து
மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப்
பயணிக்க தைரியமற்று பலவீனமாக
நிற்கின்றது.

அது ஒவ்வொரு குஞ்சும் தன்
வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு
முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே
தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே
பாதுகாப்பாகத் தங்கி விட
முடிவெடுக்கலாம்.

ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும்
பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய
இடமல்ல. 

சுயமாகப் பறப்பதும்
இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப்
பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை
அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில்
என்ன செய்வதென்று அறியாமல் வெளியே
எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும்

அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக்
குஞ்சின் உணர்வுகளை லட்சியம்
செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து
வெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில்
கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப்
பறக்க முயற்சி செய்கின்றது.

முதல் முறையிலேயே கற்று விடும்
கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க
முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும்
நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன்
குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. 

குஞ்சு
மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக
இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.

அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன்
குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப்
பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக்
கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு
விடுகிறது.
மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப்
பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக்
குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி
விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல
முறை நடக்கும்
இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின்
சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று
வெளியில் பறக்கும் கலையையும்
விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக்
கொள்கிறது. 

அது சுதந்திரமாக,
ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப்
பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக
கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின்
பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி
நிற்கும்
அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை
முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த
சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும்,
தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு
தன் வாழ்நாளில் என்றென்றைக்கும்
கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை
விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய
போது அது ஒருவிதக் கொடூரச்
செயலாகத் தோன்றினாலும்
பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும்
யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப்
பேருதவி என்பதை மறுக்க முடியாது
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும்
யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்,
பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால்
அந்தக் காரணத்திற்காகவே அந்த
சூழ்நிலைகளையும், அனுபவத்தையும்
மறுப்பது வாழ்வின் பொருளையே
மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான்
அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம்.

ஆனால் கப்பலை உருவாக்குவது அதை
துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல.
கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி
வைப்பதில் இல்லை.

கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல,
மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில்
முதல் முதலில் தள்ளப்பட்டதை
எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என்
குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப்
பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக்
கொள்வேன்" என்று நினைக்குமானால்
அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே
கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.

ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு
செய்ததாக சரித்திரம் இல்லை
அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல
பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட
கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது"
என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை
இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில்
கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது
பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு
குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம்
இருந்ததில்லை. 

அதற்கான அவசியம்
இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு
குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக
நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க
வேண்டும் என்பதில் குறியாக
இருக்கிறார்கள். 

அதில் தவறில்லை. ஆனால்
தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள்
குழந்தைகள் படக்கூடாது என்று
நினைக்கும் போது பாசமிகுதியால்
அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின்
பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத்
தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம்
செல்ல பல மைல்கள் நடந்தேன். 

அதனால் நீயும்
நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும்
என்று சொல்லவில்லை. வசதிகளும்,
வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக்
காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத்
தான் இருக்கும்.
இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின்
பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது
அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை
பிள்ளைகள் படத் தேவையில்லைதான்.

ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான
அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது'
என்று நினைப்பது அந்தப் பிள்ளையின்
உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும்
செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில
கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு
அவசியமானவையே.

அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும்
போது தான் அவன் வலிமை அடைகிறான்.
அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப்
பெற்றோர் நினைப்பது அவனுக்கு
வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள்படும் போது
பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக
இருக்கலாம்.
ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது
வாழ்க்கை அல்ல😎😎😎

Monday, December 21, 2015

MONEY ATTRACTION Affirmations

Fruitful Affirmations by famous Teachers:

Rev. Ike:

I am money.
I make my mind a money magnet.
Money is a wonderful stuff.
I see and feel myself having and enjoying more money.
I deserve the best.
God bless riches.
Say YES to money.
I Am That Rich I Am.

Neville Goddard:

I am rich.
I am wealthy.
I am prosperous.
I am successful.
I am strong.
I am secure.
I am free.
I have a lavish, steady, dependable income , consistent with integrity and mutual benefit. 

Rhonda Byrne:

Money is coming to me easily, effortlessly, frequently and abundantly.
I am a magnet to money.
I love money and money loves me.
Life is easy.
Life is so good.
Everything works ou brilliantly for my highest good.

Abraham-Hicks:

Things are always working out for me.
I love my life.
I live with ease.
I prefer to feel good.
I always reach for a better feeling thought.

Bob Proctor:

See yourself living in abundance and you will attract it.
I am so happy and grateful now that money comes to me in increasing quantities from multiple sources for a continuous basis.

Louise Hay:

My income is always increasing.
Prosperity of every kind is drawn to me.
I radiate success and prosper wherever I turn.
I am open and receptive to all good and abundance in universe.
All is well in my world.

Thank you. God bless you.

குபேர பண வரவு உண்டாகும்:

குபேர பண வரவு உண்டாகும்:

பச்சை கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும்.

All Spice என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்வசுகந்தியை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் நான்கு மூளையிலும் போட்டு வைக்க பண வரவு உண்டாகும். அடிக்கடி மாற்றி வரவும்.

இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.

புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.

AlfaAlfa எனப்படும் 'குதிரை மசால்' பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது . கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ கூடவே சிறிது எடுத்து செல்லலாம்.

வெந்தயம் சிறுது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.