Thursday, August 8, 2013

வெட்கப்படவா? இல்ல துக்கப்படவா?



வெட்கப்படவா? இல்ல துக்கப்படவா?

அடிமை ஆகினோம் என்று என்னவா? இல்லை ஏமாற்ற பட்டும் என்று என்னவா?

எப்படி நினைத்தாலும் சரி, எனது எண்ணம் நமது(இந்தியன்) கலாச்சாரமும், பண்ப்பாடும், மனிதநேயமும் அழிந்து கொண்டு தான் போகிறது.

இங்கே இருக்கும் புகைப்படம் ஆங்கிலேயன் Lord Macaulay என்பவரால் British Parliament யில் 1835 feb 2யில் கூறப்பட்டது.



"நான் இந்தியா முழுவதும் சுற்றி பார்த்து விட்டேன், அங்கு ஒரு பிச்சைகாரனையோ, திருடனையோ கண்டத்து இல்லை. ஒரு தனி கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வீரமும் கொண்ட நாடு தான் இந்தியா.

நாம் இந்தியாவை முழுமையாக ஆல முடியாதது, ஆனால் அவர்கள் பழமையான கல்வி முறையை நம் கல்வி முறைக்கு மாற்றி, அவர்கள் பண்பாட்டை மாற்றி நாமும் நம் ஆங்கிலமும் சிறந்ததது என்று நினைக்கவைதால் அவர்கள் அவர்கள் மீது வைத்து இருந்த நம்பிக்கை இழந்து விடுவார்கள், அதன் பின்னர் நாம் தெரிவிக்கும் முறையே அங்கு கலாச்சாரமாக மாறும்" என்று Lord Macaulay கூறியுள்ளான்.

அவன் நினைத்தது போல பலமாற்றங்கள் வந்தது இன்றும் அவனுக்கு அடிமையாகியது போலவே ஒரு உணர்வை தூண்ட செய்கிறத்து அவன் பரப்பிய கல்வியும், மத வெறியர்களையும் பார்கையில்.

அடிமை படுத்தியவன் சாதித்தானா? இல்லை அடிமையாக இருந்தவன் சாத்திதானா என்று கேட்டால்???

உங்களை சுற்றி நடப்பதை பாருங்கள் உங்களுக்கே புரியும் யார் வென்றார்கள் என்று.

Saturday, August 3, 2013

எதிரி தேவைப்படுகிறது.

ஒருவர் ஜெயிப்பதற்கு காரணம் கடின உழைப்பு, திறமை ,படைப்பாற்றல் அனைத்தும் இருந்தாலும் அதுக்கு மேல் போட்டி தேவைப்படுகிறது.

உதாரணம் எம்.ஜி.ஆர் , சிவாஜி பிறகு கமல் ,ரஜினி. ரஜினி இந்தளவுக்கு உயர கமலின் போட்டியும் ஒரு காரணம். விஜய்க்கு அஜித்தும் ,அஜித் முன்னேற விஜய்யும் காரணம். சிம்பு,தனுஷ் வரை அது தொடர்ந்தது.



எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ,கருணாநிதி என்று அரசியல் தந்திரம் அறிந்தவர்கள் போட்டியாளரை நன்கு அறிந்திருப்பர். அதற்கு ஏற்றார் போல செயல்படுவர்.

வியாபாரத்திலும் ஒரு போட்டியாளரை குறி வைத்து போட்டி போட்டால் வெற்றி நிச்சயம். கோக்க கோலா ,பெப்சி போல.

தனி மனிதன், அரசியல் ,கலைஞர்கள் எங்கும் போட்டி மனப்பான்மை ஒரு உத்வேகம் கொடுகிறது. இதில் மிக முக்கியம் எதிரியை ஜெயிக்க விடுவது. அதை நாம் முந்தனும். ஜெயிக்காத போட்டியாளர்களால் உபயோகம் இல்லை. உள்ளுக்குள் இருவரும் மிக நெருங்கிய நட்பு கூட பாராட்டி கொள்ளலாம். ஆனால் களத்துக்கு வந்துவிட்டால் போட்டி மிக அவசியம். அந்த வெற்றி பெறும் மனப்பான்மையை, முந்த வேண்டும் என்ற எண்ணத்தை போட்டி மட்டுமே கொடுக்கும்.