Tuesday, April 26, 2016

முக்கிய செய்தி

முக்கிய செய்தி 

விதி விலக்காக சில படங்கள் நமக்கு யதார்த்தத்தை சொல்லும். உண்மையை புரிய வைக்கும். 
தனி ஒருவன் அத்தகைய ஒரு படம் தான். 

பத்திரிகைகளில் திரித்து வெளியிடப்படும் செய்திகள், Emotional Crimes என்னும் பெயரில் நடக்கும் பல Organaised Crimes. குறிப்பாக Generic Medicines. 

பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே 

(அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்......... 

(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்........ 

(2) மருந்து பெயரை தேடவும்........... 

(3) பயன்படுத்தும் மருந்து தேடவும். உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம் பிபிசர் கம்பெனி.

(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம். 

(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்....... 

(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.........

(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒரு மாத்திரை ரூ.54.89. 

ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது. 

ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே...... 

உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது......... 

உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது...... 

அதிக மக்களை இந்த பதிவு சென்றடைய வேண்டும். இந்த பதிவை நீங்கள் காப்பி, பேஸ்ட், ஷேர் என்று என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்.

Monday, April 25, 2016

யாரெல்லாம் இப்பிறவி முழுவதும் வயதுக்குரிய மெச்சூரிட்டி இல்லையோ,அவர்கள் அனைவருமே 84,00,000

யாரெல்லாம் இப்பிறவி முழுவதும் வயதுக்குரிய மெச்சூரிட்டி இல்லையோ,அவர்கள் அனைவருமே 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு இப்பிறவியில் மனிதராகப் பிறந்துள்ளார்கள் என்று அர்த்தம்;

பல முறை மனிதப் பிறவி எடுத்தவர்களே ஜோதிடர்களாக,பிரபல தொழிலதிபர்களாக,சக மனிதர்களை பார்த்தவுடனே புரிந்துகொள்ளும் திறனுள்ளவர்களாக (திரைப்பட இயக்குநர்,பஞ்சாயத்து போருட் தலைவர்,அரசியல் கட்சியில் முக்கியப் பதவி,வங்கி அதிகாரி,காவல்துறை அதிகாரி,கோடிகளைக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள்,ஜவுளிக்கடை விற்பனையாளர்,கள்ளக் கடத்தல் தலைவர்கள்,மருத்துவர்கள்,பேருந்து ஓட்டுனர்கள்,ஆசிரியர்கள்,உடற்பயிற்சி ஆசான்கள்,யோகா மாஸ்டர்கள்,ரெய்கி மாஸ்டர்கள்,பெட்டிக்கடை நடத்துபவர்கள்,கோவில் பூசாரிகள்) இருக்கின்றார்கள்:இதை நீங்கள் நம்பாவிட்டாலும்,உண்மைகள் எப்போதுமே உண்மைகள் தான்!

விநாயகர் உபாசனை,முருக உபாசனை,சிவ உபாசனை,ஆஞ்சனேய உபாசனை,ஹயக்ரீவர் உபாசனை,குபேர உபாசனை,லக்ஷ்மீ நரசிம்மர் உபாசனை,பைரவ உபாசனை,காளி உபாசனை,நீல சரஸ்வதி உபாசனை,துர்கை உபாசனை,நவக்கிரக உபாசனை,சித்தர்கள் உபாசனை,துறவிகள் உபாசனை,மகான் உபாசனை,பிரம்மா உபாசனை,குலதெய்வ உபாசனை என்று எத்தனை இருந்தாலும், மீண்டும் இந்த பூமியில் பிறக்காமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு யார் வருவார்கள் தெரியுமா?

ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்கள் தான்!

அது எப்படி?

நம்மை நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியச் செயல்களுக்கு ஏற்ப யோகங்களையும்,அவமானங்களையும்,பணச் சிக்கல்களையும் அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;கஷ்டம் தாங்கமுடியாத போது கடவுளை கண்டமேனிக்குத் திட்டுகிறோம்;கடவுளுக்கு வேறு வேலையே கிடையாதா?(குணங்களைக் கடந்தவர் ஈசன்/கடவுள் என்று சொல்வது இதற்குத்தான்;அவருக்கு பழிவாங்குவது தெரியாது)
இந்த நவக்கிரகங்கள் பஞ்சபூதங்களின் குறிப்பிட்டச் சேர்க்கைகளால் செயல்படுகின்றன;

இந்த பஞ்சபூதங்களினை இயக்குவது பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற மும்மூர்த்திகளே!
இந்த மும்மூர்த்திகளுக்கு சக்தியளிப்பது இவர்களின் மனைவிகளான கலைவாணி,மகாலட்சுமி,ருத்ரி;
இவர்களுக்கும் மேலே இருப்பவர்கள் 11 ருத்ரர்கள்;

இவர்களையும் இயக்குபவர்கள் ஐந்து விதமான சிவபெருமான் கள்:
இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்துவது அண்ணாமலையார்!!!

அண்ணாமலைக்கும் சக்தியளிப்பது தான் அன்னை அரசாலை என்ற வராகி!

வராகி யார் தெரியுமா?

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராஜராஜேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணியின் படைத்தளபதி!

அன்னை அரசாலை என்பது வராகியின் 1000 பெயர்களில் ஒன்று;

அரசாலையை 10 வயது முதல் 100 வயது வரை யார் வேண்டுமானாலும் வழிபடலாம்;இரண்டு கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றினால் வழிபாடு வெற்றிபெறும்;
முதல் கட்டுப்பாடு: அசைவம்(முட்டை,புரோட்டா மற்றும் அனைத்துவிதமான அசைவ உணவுகளும்) ஒரு போதும் சாப்பிடக் கூடாது;

இரண்டாவது கட்டுப்பாடு:இந்த வழிபாடு செய்வதை நமது வீட்டில் இருப்பவர்களிடம் மட்டும் தெரிவித்தால் போதும்;ஒரு போதும் பிறரிடம் காட்டிக் கொள்ளக் கூடாது;(ஏன் காட்டிக் கொள்ள கூடாது? இதற்கான விளக்கம் நாம் எப்போது நேரில் சந்திக்கிறோமோ அப்போது விவரிப்போம்)

நமது அன்னை அரசாலை(வராகி)யை வழிபட ஏற்ற நாள் எது?

ஒரு வருடத்தில் 365 நாட்களுமே ஏற்றதுதான்;
தினமும் காலை(அதிகாலை 4.30 முதல் 6க்குள்)யில் 15 நிமிடமும்,இரவில்(மாலை 6 மணிக்கு மேல் நள்ளிரவு 11 மணிக்குள்) 15 நிமிடமும் பின் வரும் 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;

முதலில் ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதா நமக என்று ஒருமுறை ஜபிக்கவேண்டும்;

பிறகு ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்)நமக என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;

பிறகு ஒம் மஹாகணபதி நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;

பிறகு பின்வரும் 12 பெயர்களை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;ஒருபோதும் வாய்விட்டுச் சொல்லக்கூடாது;

பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

ஒரு மாதம் ஆனதும்,காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

இரண்டு மாதம் ஆனதும் காலையில் 45 நிமிடமும்,இரவில் 45 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

மூன்றாவது மாதம் ஆனதில் இருந்து நமது ஆயுள் முழுக்கவும் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் ஜபிக்க வேண்டும்;

அன்னை அரசாலை(வராகி)யின் அருள் சீக்கிரம் கிட்டிட பின் வரும் நாட்களில்(தேய்பிறை பஞ்சமி இரவு) அதிக நேரம் ஜபிக்க வேண்டும்;அவ்வளவுதான்;

முதல் மாதம் முழுக்கவும் இருவேளை 15 நிமிடம் ஜபிப்பீர்கள் அல்லவா? இந்த நாளில் மட்டும் உங்களால் முடிந்தவரையிலும் 15 நிமிடத்தைவிடவும் அதிகமான நேரம் ஜபிக்க வேண்டும்;அதுவும் இரவில் மட்டும் தான் இப்படி ஜபிக்க வேண்டும்;

எப்படி ஜபிக்க வேண்டும்?
வீட்டுப் பூஜை அறையில் பச்சைத்  துண்டு விரித்து(புதியதாக வாங்கிக் கொள்ளவும்)செம்புத் தட்டில் பச்சரிசியைப்பரப்பி அதன் மீது 2 விளக்குகள் ஏற்ற வேண்டும்;இரண்டில் ஒன்றில் நெய் நிரப்பி,தாமரைத் தண்டுத் திரியாலும்,மற்றதில் இலுப்பை எண்ணெயில் பஞ்சுத்திரியாலும் விளக்குகள் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றிடவேண்டும்;

அன்னை அரசாலை(வராகி) வடக்கு நோக்கி இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும்;

இந்த மன்மத ஆண்டின் தேய்பிறை பஞ்சமீ நாட்கள்;மற்றும் அடுத்த ஆண்டின்(துர்முகி) நாட்களும்!!!
 

26.4.2016 செவ்வாய்
26.5.2016 வியாழன்
9.6.2016 வியாழன்
24.6.2016 வெள்ளி
24.7.2016 ஞாயிறு
22.8.2016 திங்கள்
20.9.2016 செவ்வாய்
19.10.2016 புதன்
18.11.2016 வெள்ளி
17.12.2016 சனி
16.1.2017 திங்கள்
15.2.2017 புதன்
16.3.2017 வியாழன் இரவு 12.58 முதல் 17.3.2017 வெள்ளி நள்ளிரவு 2.36 வரை(இந்த இரண்டு நாட்களிலும் இரவு நேரத்தில் ஜபிக்கலாம்;வியாழக்கிழமை இரவு 1 மணிக்குப் பிறகு ஜபிக்க வேண்டும்)

மற்ற நாட்களில் மாலை 6 மணிக்குப் பிறகு எப்போது உங்களுக்கு வசதியோ அப்போது இரவில் ஜபிக்கலாம்;
தொடர்ந்து அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுபவர்கள்,ஒருமுறை எம்மை நேரில் சந்திப்பது அவசியம்;

சரி! எப்போது இந்த வழிபாட்டை(ஜபத்தை) ஆரம்பிப்பது?

இன்றை விட சிறந்த நாள் உண்டா! இன்று இரவிலேயே ஆரம்பிக்கலாம்;அன்னை அரசாலை(வராகி) அருள் புரிய காத்திருக்கிறாள்;அவளைச் சரணடைவோம்;அருள் பெறுவோம்;

தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமியில் வழிபட்டு நமது பிறவிகளின் எண்ணிக்கையையும்,இப்பிறவிகளின் கர்மாக்களையும் காணாமல் போகச் செய்வோம்;

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;

Sunday, April 10, 2016

மனஅமைதி

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான். வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.



ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி. வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான். குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான். பிரச்சனை தான் வேறு வேறு. நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

ஆடுகள் முக்கியம் தான். ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா?
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ்  
ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள்  
உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன. ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது. இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண்படையும்  குறைகிறது.செப்பு பாத்திரங்கள் நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சமையல்,  
தண்ணீர் சேகரிக்கும் பாத்திரமாக சாதாரணமாக எல்லார் வீடுகளிலும் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது. அலுமினியம், எவர்சில்வர் போன்றவை செப்பின் பயன்பாட்டை குறைத்து விட்டது.செப்பில் ஊற்றி வைக்கும் நீரில் ஓரிரண்டு துளசி இலைகளை  
போட்டு வைத்திருந்து குடித்தால் மிகவும் நல்லது.உடம்பில் ஏதேனும் ஓரிடத்தில்  
செம்பு என்னும் உலோகமானது இருக்குமானால் அது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது. மற்ற உலோகஙகளுக்கு இல்லாத சிறப்பு செப்பக்கு மட்டும்  கொடுக்கபட்டிருப்பது ஏன் என்றால் செப்பு தன்னை சுற்றி இருக்கும் பரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது  
முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும் செப்பு  
பாத்திரங்களைபயன்படுத்தினார்கள். செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கும் பயன்படுத்தும் பொது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது. எனவே பூஜை என்று வரும் போது செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே  
சிறந்தது.தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக  
கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு  
சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை  
குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த  
சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும்  
பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால்  
கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள்  வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் !
--------------

            உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. 

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம். 

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது. 

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம். 

வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை, 

எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி. 
நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது..

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது. 

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது. 

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது. 

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது. 

நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். 

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை. 

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும். 

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். 

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும். 

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும். 

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... !  நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும். 

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். 

புத்தி பேதலிப்பு கூட சரியாகும். 

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம். 

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க. 

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்

நன்றி

நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கும் ....

ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார் 
“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களா? ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை “ என கேட்டார்.

சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்  

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் “ என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார் 

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். 

அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்க” என கூறினார். 

உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையனை நின்றார்கள். சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார். 

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான். மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

 உடன் பார்வதி அன்னை “ அப்பா நீ பாவமே செய்யவில்லை யா? “ என வினவினார். அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கேன் அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன் நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான். 

முதியவர் சொன்னார் " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை “ 

என சொல்லி அழைத்து சென்றார் 

நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கும் ....

வாய்ப்புக்கள்

குட்டி கதை...

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம்
தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’
என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு
மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது.
மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.
அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி,

‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா?
உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’
என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை
துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.........!!!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்.

Saturday, April 9, 2016

நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கு

நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கும் ....

ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார் 
“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களா? ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை “ என கேட்டார்.

சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் “ என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்க” என கூறினார்.

உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையனை நின்றார்கள். சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான். மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடன் பார்வதி அன்னை “ அப்பா நீ பாவமே செய்யவில்லை யா? “ என வினவினார். அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கேன் அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன் நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.

முதியவர் சொன்னார் " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை “

என சொல்லி அழைத்து சென்றார்

நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கும் ....