Saturday, December 14, 2013

வாழ்வில் சாதிக்க எதுவும் தடையில்லை... தன்னம்பிக்கையும் உழைப்புமே அவசியம் !!!

வாழ்வில் சாதிக்க எதுவும் தடையில்லை... தன்னம்பிக்கையும் உழைப்புமே அவசியம் !!!

ரூ.3 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் பெங்களூர் சலூன் கடைக்காரர்!

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பெரும் தொழிலதிபர்கள், அரச பரம்பரையினர், அரசியல்வாதிகள் வாங்க முடியும், வைத்திருக்க முடியும் என்று நம்புவது இயல்பு. ஆனால், பெங்களூரை சேர்ந்த சலூன் கடைக்காரர் ரூ.3 கோடி மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர காருக்கு சொந்தக்காரர் என்றால் நம்ப முடிகிறதா?

ரோல்ஸ் மட்டுமல்ல ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என மொத்தம் 67 கார்களுக்கு சாட்சாத் அவர்தான் சொந்தக்காரர். பெங்களூரை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவர் 9 வயதாக இருக்கும்போத தந்தை இறந்துவிட்டார். சொத்து சுகம் என்று எதையும் இவரது தந்தை வைத்து விட்டு போகவில்லை.

வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் பெங்களூர் பிரிகேட் சாலையில் உள்ள தனது தந்தையின் சலூனை வாடகைக்கு விட்டார். தினமும் 5 ரூபாய் கிடைத்தது. ஆனால், அந்த வருமானம் வயிற்றைக் கழுவுவதற்கே பற்றாக்குறையானது.

இதனால், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பாபு படிப்பை பாதியிலேயே கை கழுவி விட்டு குடும்ப சூழ்நிலையால் முழுநேரமாக முடிதிருத்தும் தொழிலில் இறங்கினார். தொழிலை கற்றுக்கொண்ட பின்னர், கடந்த 1991ம் ஆண்டு சொந்தமாக சலூன் ஒன்றை துவங்கினார். சாதாராண பாபு கொஞ்சம் கொஞ்சமாக தொழிலில் 'பாப்புலர்' பாபு ஆனார். போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் ரமேஷ் பாபுவின் வாடிக்கையாளர்களாக வரிசை கட்டினர். பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஆமிர்கான், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ரமேஷ் பாபுவின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், வருமானம் உயர்ந்ததால் கடந்த 1994ம் ஆண்டு ரமேஷ் பாபு ஒரு மாருதி ஆம்னி வேனை வாங்கி வாடகைக்கு விட்டார். முடிதிருத்தும் தொழில் போன்றே டாக்ஸி தொழிலிலும் வருவாயும், பிரபலமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் தேவைக்கு தக்கவாறு தனது டாக்ஸி நிறுவனத்துக்காக பல்வேறு கார்களை வாங்கினார். தற்போது ரமேஷ் பாபு வசம் ரூ.3 கோடி மதிப்புடையை ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர கார் உள்பட ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என அனைத்து நிறுவனங்களின் சொகுசு கார்களும், சாதாரண ரக கார்களும் இருக்கின்றன.

மொத்தம் ரமேஷ் பாபு வசம் தற்போது 68 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில், ரமேஷ் பாபு வாழ்க்கையை மையமாக வைத்து 3 மொழிகளில் புதிய சினிமா ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர காரையும் பில்லியனர் பாபு வாடகைக்கு விடுகிறார். அந்த காருக்கு ஒரு நாள் வாடகை ஜஸ்ட் ரூ.50,000..

http://www.youtube.com/watch?v=Bk-1nDFUxIg