ஆயுர்வேதம் உடல், மனம்
மற்றும் ஆன்மாவை
ஒன்றுபடுத்தும்
ஆயுர்வேதம் கி.மு 600 ஆம்
நூற்றாண்டில் இந்தியாவில்
தோன்றியது. இந்த
புதியமுறை மருத்துவம்
உடலில் ஏற்படும்
நோய்களைத் தடுப்பதோடு
குணப்படுத்தவும்
செய்கிறது. ஆயுர்வேதம்
தோன்றிய
காலத்திலிருந்து
இன்றுவரை
ஆரியர்களாலும்
திராவிடர்களாலும் இது
கடைப்பிடிக்கப்பட்டு
வருகின்றது. இன்று இது
மருத்துவத்தில் ஒரு
தனித்தன்மை வாய்ந்த
இன்றியமையாத பிரிவாக
உள்ளது. உங்கள் உடல்
நிலைக்கு ஏற்ப
கண்டறியப்பட்ட நோயின்
அடிப்படையில் வாதம்,
பித்தம், கபம், ஆகியவற்றை
சமநிலையில் வைப்பதற்கான
ஒரு முழுமையான
இயற்கை மருத்துவம்
இதுவாகும்.
ஆயுர்வேதம் பாதிக்கப்பட்ட
உடம்பிற்கு மட்டுமல்லாமல்
முழு உடலுக்கும்
சிகிச்சை அளிக்க வேண்டும்
என நம்புகிறது. உங்களை
இயற்கையான வழியில்
புத்துணர்ச்சி
ஊட்டுவதற்கும்
உடலிலிருந்து தீங்கு
விளைவிக்கும்
பொருட்களை
வெளியேற்றி அதன் மூலம்
நிலையான
எதிர்ப்பாற்றைறயும் நல்ல
ஆரோக்கியத்தையும்
உருவாக்கவும் இது
உதவுகிறது.
ஆயுர்வேத பூமி, கேரளா
கேரளாவின் சமச்சீரான
காலநிலை, இயற்கை
வளங்கள் நிறைந்த காடுகள்
(மூலிகை மற்றும்
மருத்துவ செடிகளின்
வளங்கள் நிறைந்த) மற்றும்
ஈரமான காலநிலை (ஜூன்-
ஜூலை மற்றும் அக்டோபர்-
நவம்பர்) ஆகியவை
ஆயுர்வேதத்தின்
குணப்படுத்தும் மற்றும்
ஆரோக்கியம் தரும்
செயலுக்கு ஏற்றதாக
உள்ளன.
உண்மையில் இன்று
இந்தியாவில் கேரளாவில்
மட்டுமே இம்மருத்துவ
முறை முழு
அர்ப்பணிப்புடன்
நடைபெற்று வருகிறது.
பருவ மழைக்காலம்,
புத்துணர்வூட்டலுக்கான
சரியான காலமாகும்
பாரம்பரிய ஆய்வுகள், பருவ
மழைக்காலம் தான்
புத்துணர்வு
நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற
காலம் என்பதைத்
தெரியப்படுத்தியுள்ளது.
வானிலை தூசு
இல்லாமலும்
ஈரப்பதத்துடனும்
இருப்பதால் அது
உடலிலுள்ள துவாரங்களை
பெரிதுபடுத்துவதால்
மூலிகை எண்ணெய் மற்றும்
தெரபிகள் பயன்படுத்த இது
ஏற்றதாக உள்ளது.

No comments:
Post a Comment